Menu

Video

0 Comment

Rekka

Categories: 

மதுரை பெண்ணாக லட்சுமிமேனன் அதிரடி நாயகனாக விஜய் சேதுபதி

றெக்படத்தில், கும்பகோணத்தை சேர்ந்த இளைஞராக விஜய் சேது பதியும், அவருடைய காதலியாக மதுரை பெண்ணாக லட்சுமி மேனனும் நடிக்கிறார்கள். இவர் களுடன் சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், கிஷோர், சிஜா ரோஸ், ஹரீஷ் உத்தமன், ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

யுகபாரதி பாடல்களை எழுத, டி.இமான் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ரத்தின சிவா. பி.கணேஷ் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு: சுபா கணேஷ். படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள சிவபாலன் பிக்சர்ஸ், ஆயுத பூஜை அன்று படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

‘றெக்க’ படத்தை பற்றி அதன் டைரக்டர் ரத்தின சிவா கூறியதாவது:-

“விஜய் சேதுபதியை சிறந்த நடிகராகத்தான் எல்லோருக்கும் தெரியும். அவரை முழுமையான அதிரடி நாயகனாக காட்டப் போகிறது, இந்த படம். படத்தின் பெயருக்கு ஏற்ப சென்னையில் தொடங்கி காரைக்குடி, மதுரை, கும்பகோணம் மற்றும் பாங்காக் ஆகிய இடங்களில், ‘றெக்க’ கட்டி பறந்தது போன்ற வேகத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறோம்.”

Tags: 

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518