Menu

Article

0 Comment

2015ம் வருடம் “சார்பதிவு” அலுவலகத்தில் நடந்தேறிய பத்திர பதிவு ஆவண மோசடி! கண்டுகொள்ளுமா மாவட்ட காவல்?

Categories: 

தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற அ.தி.மு.க., அரசின் காவல்துறை கண்ணியமாக தன் கடமையை கட்டுபாடுடன் எல்லா நிலையிலும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, முதல்வர் ஜெயலலிதாவிற்கு நற்பெயரை ஏற்படுத்தி வருகிறது. யார் எந்த குற்றவழக்கில் சிக்கினாலும் குற்றவாளிகளுக்கு பின்னணி “கருப்பு ஆடு” காவல்துறையினரே இருந்தாலும், குற்றம் செய்தவர்களை நீதிக்குட்படுத்துவதில் தலைசிறந்து விளங்கிகொண்டிருக்கும் நம் காவல்துறை!
2015இல் பொன்னேரி சார்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி கள்ளக்குறிச்சிக்கு மாற்றலாகி சென்றிருக்கின்ற சார் பதிவாளர் கண்ணன் ஏன் கைதாகவில்லை? என்கிற கேள்வி பெரிதாகி, காவல்துறையை களங்கப்படுத்துமோ? என்ற அச்சம் நிலவி வருகிறது! சார் பதிவாளர் கண்ணன் பொன்னேரி அலுவலகத்தில் பணிபுரிந்ததையடுத்து, இடம் மாற்றலாகி கள்ளக்குறிச்சிக்கு சென்றாலும் அவர் செய்ததான தில்லாலங்கடி ஆவண மோசடியின் வாசனை மனம் மாறாமல் பொன்னேரியை சுற்றி வீசிக்கொண்டிருக்கிற மனம் நம் சுவாசத்தில் ஏற, நாம் உடனடி களப்பணிக்கு இறங்கி நகர்ந்ததில் நமக்கு கிடைத்தது அதிர்ச்சி தகவல்!
தகவலின் பின்னணியாக பொன்னேரி ஆமுர் போஸ்ட் சைனாவரம் கிராமத்தில் வசித்து வரும் லட்சுமி என்ற தகிடுதத்த பெண்மணியின் மோசடி அரங்கேற்ற படக்காட்சியின் ஒலி சத்தம் நம்மை அதிரவைத்தது! இன்றைக்கு எத்தனையோ பெண்கள் அநீதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் லட்சுமி என்ற பெண், மோசடி வேலையில் தன்னை ஈடுபடுத்தி, பெண் சமூகத்தை கேவலப்படுத்தியிருப்பது, லட்சுமியின் முகத்திரையை கிழித்தால்தான் பெண் சமூகம் தலைநிமிர முடியும்.

லட்சுமி தன் மகள் கலையரசிக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நாடி துடிப்போடு தன் மகளையும் ஹேமலதா, சண்முகம், வழக்கறிஞர் அசோக்குமார் ஆகிய மோசடி கும்பல்களுடன் 1.7.2015 அன்று பொன்னேரி சார்பதிவு அலுவலகத்திற்கு சென்று கலையரசியாகிய தன் மகளுக்கு செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்துள்ளார். (ஆவண எண் 7276/2015) லட்சுமி தன் மகள் செட்டில்மெண்ட் பதிவு பத்திரத்தில், பொன்னேரியடுத்த கொடூர் கிராமத்தில் வசித்து வந்த சுப்பிரமணி என்பவர் 8 ஏக்கர் 12 சென்ட் நிலத்தை 3.7.1986 அன்று கிரையம் செய்து கொடுத்ததாக பொய் ஆவணம் புணைந்திருக்கிறார்.
இந்த பெண் ஆண் ரூபத்தில் சகலகலா வல்லவன் என்று கூட சொல்லலாம்! நிலத்தை விலை கிரையம் பெறுவதற்கு அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதற்கு வழக்கறிஞரின் ஆலோசனையை பெறுவது நிலம் வாங்குபவர்களின் வழக்கம். ஆனால் லட்சுமிக்கு பொய் ஆவணம் தயாரித்து கொடுத்திருப்பது ஓர் வழக்கறிஞர் என்பதால், பொதுமக்கள் யாரைதான் நம்புவதென்ற குழப்பத்தோடு உள்ளனர்.

மோசடிக்கு கையப்பமிட்ட வழக்கறிஞர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால்தான் நீதி நிலைக்கும். லட்சுமி சுப்பிரமணி சர்வே எண்களுடன் அத்திபேடு கிராமத்தின் சர்வே எண் 117இல் பத்திரப் பதிவாகியுள்ள ஜெயலட்சுமி என்பவரது ஆவண எண் 1864/1986ஐ பயன்படுத்தி, தன்னை விட மோசடி செய்வதற்கு யார் இருக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் லட்சுமி. படிப்பு காலத்தை முடித்துவிட்டு அரசு வேலை வாய்ப்பு அலுவலக நேர்முக தேர்வோ அல்லது எழுத்து தேர்வோ நடைபெறாதா என்று காத்திருந்தவர் தானே இந்த கண்ணன்.

ஒருவேளை TNPSC தேர்வு எழுதி SR ஆகியிருக்கலாம். அரசு ஊழியர் புதிதாக பணியில் சேரும்போது அனைத்து சட்டதிட்டங்களை குறித்த பயிற்சிக்குப் பின்தான் பணி ஒதுக்கீடு செய்வார்கள். பயிற்சிக்குப் பின் லஞ்சம் பெறுவதும், கொடுப்பதும் என்ற தாரக மந்திரத்தை நெற்றியில் இட்டு அமருவது ஒவ்வொரு அரசு ஊழியரின் கடமை.

கடமையை மீறிய கண்ணனுக்கு கை அரிப்பு ஏற்பட லட்சுமியும் இதனை கட்சிதமாக பயன்படுத்தி அரிப்பெடுத்த கைக்கு பல இலட்சங்கள் கொடுத்து, மருந்திட்டுள்ளனர் லட்சுமி குழுவினர். மருந்திட்ட கரத்திற்கு கண்ணனும் 7276/2015 ஆவன எண்ணை பரிசளித்து சார்பதிவாளரும் இம்மோசடிக் கூட்டணியில் இணைந்தது பதிவு அலுவலகத்திற்கே கேவலம் அல்லவா! போலி ஆவண தயாரிப்பு கும்பலுக்கும், மாணங்கெட்ட பிழைப்பு சார்பதிவாளருக்கும் பாலம் கட்டிய மேஸ்திரிகள் பொன்னேரி சார்பதிவு அலுவலகத்தில் தரகர்களாக பணியாற்றுகிற பாஸ்கர் (எ) அன்பு, வினோத் போன்றோரின் முக்கிய பங்களிப்பு இருந்ததால் தான் மோசடி திரைப்படம் வெற்றிகரமாக நடந்தேரியுள்ளது.

பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துடிக்கும் மோசடி தரகர்கள் ஊடுருவியிருப்பதினால், பொதுமக்கள் ஏன் அச்சப்படமாட்டார்கள் என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. ஓர் குற்ற சம்பவம் நிகழும்போது குற்றத்தை நேரில் பார்க்கும் நபர்களை சாட்சிகளாக சேர்ப்பார்கள் காவலர்கள். வழக்கில் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கும் சாட்சிகள், நீதிக்கு முன் நிற்கும் போது குற்றவாளிகள் தப்பிவிடாதபடிக்கு நீதிக்கு உறுதுணையாக இருக்கவும் நீதி வெல்வதற்கும் சாட்சிகள் முக்கியம்.

தனிப்பட்ட முறையிலும் கூட இருவர் ஏற்படுத்தி கொள்ளும் ஒப்பந்தத்தில் சாட்சி கையப்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. லட்சுமி, கலையரசி மோசடியில் ஹேமலதா, சண்முகம் போன்றோர் மோசடி ஆவணத்தில் சாட்சி கையப்பமிட்டு சாட்சி பிரமாணத்தை மானம் இழக்கச் செய்து, கூட்டு மோசடி திட்டத்தில் பலன் அடைந்து தன்மானம் போனாலும் பரவாயில்லை, பணம்தான் என் குறிக்கோள் என வாழ்கின்ற இவர்கள் எந்த வகையிலும் தப்பிவிடக்கூடாதபடி சட்டம் தன் கடமையை செய்யும்போதுதான் இம்மானம் கெட்டவர்களுக்கு புறியும்.

இம்மோசடி சம்பந்தமாக சுந்தர் என்பவர் 22.10.2015 அன்று பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கு/எண் 160/2016இல் மோசடி கும்பல்களான லட்சுமி, கலையரசி, ஹேமலதா, சண்முகம், வழக்கறிஞர் அசோக்குமார் ஆகியோர்கள் மீது மோசடி வழக்கு பதிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், ஆவண மோசடியில் கைகோர்த்திருக்கும் நபர்களை சார்பதிவாளர் கண்ணன் மற்றும் லஞ்சப்பணபித்து தரகர்கள் பாஸ்கர் (எ) அன்பு, வினோத் ஆகியோர்களை இவ்வழக்கில் ஏன் சேர்க்கப்படவில்லை என்கிற கேள்வியினால் காவல் துறைக்கு களங்கம் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது.
மேலும் சுந்தர் ஏன் கண்ணனை புகாரில் சேர்க்காமல் விட்டுவிட்டார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சுந்தரே லட்சுமி கூட்டணிகளான கண்ணன் போன்றவர்கள் தப்ப விடுவது கேள்விக்குரியாக இருப்பது ஒருபுறமும், காவல்துறையும், பதிவுத்துறையும் அரசு சார்ந்த துறையாக இருப்பதனாலயோ? காவல் கண்ணனை விட்டு விட்டார்களோ என்னவோ!

அரசு இருக்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தி மோசடி வேலைகளில் கைகோர்த்திருக்கிற லஞ்ச பேர்வழிகளான கண்ணன் போன்றோர் கைது செய்யப்பட்டால்தான் மற்ற அதிகாரிகளும் இதுபோன்ற தீய செயல்களில் ஈடுபடாமல் சம்பளமே போதுமென்று பணியாற்றுகிற பயம் ஏற்படும். ஆகவே மாவட்ட காவல்துறை இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு செல்லும் முன் பொன்னேரி காவல் நிலைய அதிகாரிகள் வெளியில் தலைநிமிர்ந்து சுற்றிதிரியும் மோசடி கும்பலின் கூட்டாளிகளான மேற்கண்ட மூவர்களை கைது செய்து தீர விசாரிக்கவும், விசாரணைக்குப்பின் மூவரும் குற்றம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் நீதியின் முன் நிறுத்தவும் உத்தரவிடுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518