Menu

Article

0 Comment

விழுப்புரம் வில்லங்க போலீஸ் இன்ஸ்பெக்டர் தஞ்சாவூருக்கு அதிரடியாக பணியிடமாற்றம்!

Categories: 

ஈரோட்டில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தவர் சொட்டை குமார். இவர் காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். பணிக்கு சேர்ந்தது முதல் கன்னி வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இத்துடன் தனது இரண்டாவது மனைவியுடன் விழுப்புரம் கம்பன் நகரில் வசித்து வந்தார். இவருக்கும், இரண்டாவது மனைவிக்கும் பிறந்த ஒரு மகன் மட்டும் உள்ளார். இந்நிலையில் உதவி ஆய்வாளராக இருந்தபோது வழுதரெட்டியில் பலரை மிரட்டி நிலம், வீட்டு மனைகளை வாங்கி குவித்து வந்தார்.

பல எழுதப்படாத சொத்துகள் பினாமி பெயரிலும் இவர் வாங்கி குவித்துள்ளார். முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடி பெயரைச் சொல்லி அவருக்கு விசுவாசமாக செயல்பட்டது போன்று வெளியில் காண்பித்து பல கோடி சொத்துக்களை வாரி சுருட்டினார்.

திருடர்களை பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிப்பது இவரது வாடிக்கையாக இருந்து வந்தது. அத்துடன் இவருக்கு பெரிய ரௌடிகளுடன் நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது. மனித உரிமைகள் மீறல் தொடர்பாக இவர் மீது பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே காவல் துறையில் உள்ள உயரதிகாரிகளை கையில் போட்டு கொண்டு அவர்களிடம் நடிப்பை காண்பித்து உத்தமர் விருது வாங்கினார் இந்த சொட்டை குமார். இதற்கு விழுப்புரம் நகரில் உள்ள சமூக அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

புதுச்சேரியில் உள்ள ஒரு நாளிதழின் உரிமையாளரை சந்தித்து செய்தியாளர்களை மறைமுகமாக மிரட்டி வந்தார் இந்த சொட்டை குமார். இப்படி இவரது அராஜக செயல் நாளுக்கு நாள் நீடித்து கொண்டே போனது. ஒரு வழியாக இவரது பிடி தளர்ந்து இவர் நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமானார். இவருக்கு அப்போதைய நகர காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஈரோட்டை சேர்ந்த ஜெகதீசன் துணை நின்றார். அவர் அந்த செய்தியாளரை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஏ.எஸ்.ஜி., திருமண மண்டப வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் உள்ள ஒரு அறையில் பிற்பகல் 1 மணியளவில் சந்தித்து அழுது மன்னிப்பு கேட்டு என்னை இத்துடன் விட்டு விடுங்கள் என்று கேட்டு கதறி அழுதது பலரது நினைவில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது. இவர் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாரி குவித்துள்ளார்.

இவர் மீது வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுப்பதுடன் சோதனை நடத்தினால் உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வரும். அ.தி.மு.க., வந்தால் நான் அ.தி.மு.க.,காரர்களுக்கு விசுவாசியாக இருப்பது போன்று காட்டி கொள்வார். தி.மு.க., வந்தால் தி.மு.க.,வுக்கு விசுவாசமாக இருப்பது போல காண்பித்து கொண்டு மகா நடிகன் போன்று நடித்து கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார் இந்த காவல் ஆய்வாளர் சொட்டை குமார். இவரைப் போல நடிப்பதற்கு காவல் துறையில் உள்ளவர்கள் கற்று கொள்ள வேண்டும்.

இப்படி பலரை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த சொட்டை குமார் தொடர்பாக பல செய்திகள் வெளியானது. இந்த புகார்கள் மீது விசாரணை நடத்திய காவல் துறை உயரதிகாரிகள், அதாவது சொட்டை குமாருக்கு ஜால்ரா போடும் அதிகாரிகள் இவரை காப்பாற்றும் செயலில் மறைமுகமாக ஈடுபட்டது இப்போது தெரியவந்துள்ளது. நீ இங்கு பணியாற்றினால் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். ஆதலால் விழுப்புரத்தில் இருந்து வெளியூருக்கு சென்று பணியாற்றுமாறு அவருக்கு அறிவுரை வழங்கி அவரை காப்பாற்றும் முயற்சியில் சொட்டை குமார் போன்று காவல் துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக அவர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தஞ்சாவூர் ரயில்வே காவல் ஆய்வாளராக பணியிடமாற்றம் செய்து அவரை தப்பிக்க செய்துள்ளனர். இவர் மீது காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும். இவர் கணக்கில் காட்டாமல் வைத்துள்ள வீட்டுமனைகள், விளை நிலங்கள், பணம், நகை போன்ற பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் கொள்ளையடித்த பொருட்கள் நாட்டு உடமையாக்கப்படும். இதுபோன்ற பசுத்தோல் போர்த்திய புலிகளை வேட்டையாட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்த வேண்டும். எதையும் செய்யாமல் ஆட்டோ ஓட்டியவர் பல கோடி சுருட்டியது எப்படி? என்பதை நாட்டு மக்களுக்கு சொட்டை குமாரும், அவரை காப்பாற்ற பின்புலமாக செயல்படும் அதிகாரிகளும் வெட்டவெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். சொட்டை குமார் மீதும், அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கையை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., அரசு எடுக்க வேண்டும் என்பதுதான் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டி.ஜி.பி., ராஜேந்திரன் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். காவல் துறை என்னதான் செய்யப் போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சொட்டை குமார் சொல்வதை கேட்டு அவரை விட்டுவிடப் போகிறதா? அல்லது உரிய விசாரணை நடத்தி துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518