Menu

Article

0 Comment

மீடியா ஹார்ன் செய்தி எதிரொலி! திருப்பூரில் பண முதலாளிகளுக்கு ஆதரவாக மேம்பால பணி

Categories: 

வழக்கு தொடருவேன் டிராபிக் ராமசாமி முடிவு!!
திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு வரும் "தேவையற்ற பாலத்தால் மக்களின் தேவைகளை மறந்த அதிகாரிகள்" என்ற தலைப்பில் கடந்த ( மே 26-ஜுன் 01) வாரம் செய்தி ஒன்றை வெயிட்டு இருந்தோம்.அத செய்தியால் அதிகாரிகளின் தலையில் இடி இறங்கிய நிலையில் .டிராபிக் ராமசாமி வருகையால் மற்றொரு செய்தி அவர்களின் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டு இருக்கிறது.

திருப்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வந்தார். அவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்புறம் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை பார்வையிட்டார். மேலும், இப் பணிகள் குறித்து பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் இதனால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த மேம்பாலம் பெரும் பணம் முதலாளிகளுக்கு ஆதரவாக கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இது பெரும் இடையூறாகவே காணப்படுகிறது. இதில் பல முறைகேடுகள் இருப்பதாக புகார் வந்து கொண்டே இருக்கிறது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், திருப்பூர் மாநகர போக்குவரத்து நெரிசலை போக்கும் விதமாகவும் இந்த மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. மேம்பால திட்ட வரைவுபடி முதலில் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகில் இருந்து எம்.ஜி.ஆர்.சிலை வரை சுமார் 1100 மீட்டர் தூரம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, பண முதலாளிகளின் கோரிக்கையின்படி 800 மீட்டராக குறைக்கப்பட்டது. பின்னர் அந்த தூரம் 600 மீட்டராக குறைக்கப்பட்டு தற்போது 350 மீட்டர் தூரத்தில் மட்டுமே மேம்பால கட்டப்படுகிறது. 1100 மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.43 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த மேம்பாலத்தின் தூரம் 350 மீட்டராக குறைக்கப்பட்ட பின்னரும் அதே நிதியை செலவிட்டு வருவது தெரிகிறது. இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. மேம்பாலத்தின் நீளம் குறைக்கப்பட்டது குறித்து உடனடியாக விசாரிக்க கோரி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். பால பணிகள் நிறுத்தப்பட்டு, பாலம் இடிக்கப்பட்டாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது நான் தொடர இருக்கும் வழக்கின் தன்மையை பொறுத்தது. இது மட்டுமின்றி திருப்பூருக்குட்பட்ட பல பகுதிகளில் கட்டுபாடின்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபாதையை ஆக்கிரமித்து மாநகராட்சி விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்க விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அதை அகற்றும் படி அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் தற்போது இதை அகற்ற இயலாது என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.ஆனால் விளம்பர பதாகைகளை அகற்றும் வரை இந்த இடத்தை விட்டு விலக போவதில்லை என்று கூறி அங்கேயே நின்றார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த விளம்பர பதாகைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து புதிய மார்க்கெட் வீதி பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளையும் பார்வையிட்டார்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518