Menu

Article

0 Comment

மாநகராட்சியின் குப்பை கிடங்கினால் நோய்தொற்று அபாயம்... மக்கள் அவதி...

Categories: 

திண்டுக்கல் மாநகராட்சியின் குப்பை கிடங்கினால் போர்வெல் தண்ணீர் துர்நாற்றத்துடன் கழிவுநீராக வருகிறது. இதனால் நோய்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

திண்டுக்கல்-பழநி ரோட்டில் புறவழிச்சாலைக்கு முன்பாகவே முருகபவனத்தில் மாநகராட்சி குப்பைகிடங்கு உள்ளது. இதில் மாநகராட்சிகுட்பட்ட 48வது வார்டு பகுதிகளில் இருந்து சேகரிக்கும் குப்பைகளை வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு இங்கு கொட்டப்படுகிறது. இப்பகுதிகளில் தற்போது முத்துராஜ்நகர், இந்திராநகர், முருகபவனம் காலனி குடியிறுப்புக்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதிகளில் வீடுகள் இல்லாமல் காலி இடங்களாக இருந்துள்ளது. இதனால் நகராட்சிக்கு சொந்தமான 12ஏக்கர் காலி இடத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். பின்பு இங்குள்ள குப்பைகளை நகராட்சி அலுவலர்கள் வேறு இடத்திற்கு கொண்டு சென்று மறுசுழற்சி செய்து வந்தனர். இதில் மக்கும் குப்பைகள் மண்ணில் குழிதோண்டி புதைக்கப்பட்டும் மக்காத குப்பைகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டும் வந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள கிடங்கில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. கோடைகாலங்களில் மாதமிருமுறை குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரியும்.இதனால் திண்டுக்கல் நகரமே புகை மண்டலமாக காட்சியளிக்கும். இச்சம்பவத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பழநி, கோவை உள்ளிட்ட பஸ்கள் செல்லும் ரோட்டில் திடீர் சாலைமறியல் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெறும். இதனால் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இச்சம்பவத்தின்போது தீயணைப்புதுறையினர் பணியில் ஈடுபடுவதும் பின்பு போலீசார், வட்டாட்சியர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதும் தொடர்ந்து வழக்கமாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு யாரும் வசிக்கவில்லை. தற்போது அவரவர் சொந்த இடத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். இங்கு மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கிடங்கிற்கு காம்பவுண்ட் சுவர் கூட கிடையாது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிக்கள் வீட்டிற்குள் வந்துவிடுகிறது.கொசுக்கடியினால் பலருக்கும் தொடர் காய்ச்சல் ஏற்படுகிறது.சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையால் குப்பை கிடங்கினுள் தேங்கிய தண்ணீர் முழுவதும் வெளியேறி ஆறாக திடீரென இப்பகுதி குடியிறுப்பு பகுதிக்குள் புகுந்தது.இதனால் பலரது வீட்டிற்குள் துர்நாற்றத்துடன் கழிவுநீர் தேங்கிவிட்டது. இதனால் அன்றிரவு பஸ் மறியல் போராட்டமும் நடத்தினோம். அப்போது வந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்.

ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை. தற்போதுள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே நகர்ப்பகுதி குடியிறுப்புக்களாக மாரிட்டது. வேறு இடத்திற்கு குப்பைகிடங்கை உடனடியாக மாற்றவேண்டும். ஆண்டுகணக்காக ஒரே இடத்தில் குப்பைகள் குவிக்கப்பட்டு பின்பு காலப்போக்கில் மண்ணில் மக்கிப் போனதால் தற்போது இங்குள்ள வீடுகளில் போர்வெல் தண்ணீர் துர்நாற்றத்துடன் சிவப்பு கலர்களில் வருகிறது. இதனால் இந்த தண்ணீரையும் பயன்படுத்த முடியவில்லை.

தற்போது மாநகராட்சியாகியும் நகருக்குள்ளேயே குப்பைகிடங்கு இருப்பது வேதனையாக உள்ளது என தெரிவித்தனர்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518