Menu

Article

0 Comment

புதிய நீதி கட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் வேலூர் தி.மு.க.,!

Categories: 

தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும் என்று தமிழகத்தின் முக்கிய கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், தி.மு.க., போன்ற கட்சித் தலைமை உள்ளாட்சி தேர்தலை காட்டிலும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதற்கான சூழ்நிலைகளை எதிர்பார்த்து உள்ளனர்.

நிலைமை அவ்வாறு இருந்தும் வேலூர் மாவட்டத்தில், குறிப்பாக வேலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க.,வினர் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

அதற்கு ஏற்ப வேலூர் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் வந்து போகட்டும், ஆனால் சட்டமன்ற தேர்தல் வந்து விடக்கூடாது என வேண்டாத கடவுள் இல்லை என்கின்றனர். அதற்கான காரணம் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்தால் அப்போது நாம் மீண்டும் தேர்தலில் நின்று பணத்தை செலவு செய்யவரும். இரண்டாக போன அ.தி.மு.க., மீண்டும் இணைந்து நம்மைவிட மக்கள் செல்வாக்கு, பணம் அதிகமாக செலவு செய்ய கூடியவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் நமது வெற்றி எப்படி இருக்குமோ-? என அவர் அஞ்சுவதாகவும் அவருடன் இருக்கும் உடன்பிறப்புகள் பேசி வருவதாக தகவல் கசிகின்றது. இந்த தகவலை தொடர்ந்து நாம் விசாரணை மேற்கொண்டதில், ஏற்கனவே நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலின் போது வேலூர் மாநகராட்சிக்கு தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள வார்டுகள் என சில வார்டுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் தி.மு.க., நிர்வாகிகளுடன் எடுத்து கூறி கேட்க, தி.மு.க.,வினர் காங்கிரஸார் கேட்கும் வார்டுகளுக்கு மாறாக ஒதுக்க முன்வர, பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டாமல் காங்கிரஸ் தனித்தே அவர்களது சின்னத்தில் போட்டியிட ஆயத்தமான தருணத்தில் தேர்தல் தள்ளி போகும் நிலைக்கு வந்துவிட்டது.

இந்நிலையில் வேலூர் காங்கிரஸார், வர இருக்கும் தேர்தலில் தி.மு.க.,வுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி தமக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடத்தை பெற முயல்வதாகவும், ஆனால் தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளும், காங்கிரஸ் தற்போது பலம் இழந்துள்ளது. தாங்கள் கேட்கும் வார்டுகளை ஒதுக்க முடியாது. உங்களுக்கு ஒதுக்குவதற்கு பதில் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க., நின்றால் கூடுமான வரை வெற்றி பெற்று முடிந்தால் மாநகராட்சியை எங்கள் வசமாக்கி கொள்வோம் என திட்ட வட்டமாக காங்கிரஸ் கட்சியினரிடம் கூறி வருகின்றனராம். இதற்கு முன் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாநகராட்சிக்கு பெரும்பாலான உறுப்பினர்கள், தான் சார்ந்த சமூதாயத்தை சார்ந்தவர்களை நிறுத்திட வேண்டும் என்ற உறுதியுடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் செயல்படவும், மாவட்ட செயலாளர் நந்தகுமார் கண் இருந்தும் குருடனை போல் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் போகவும், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி மூத்த அரசியல்வாதி என்றாலும் கார்த்திகேயனின் கைக்கு அடக்கமாக செயல்பட்டு வருவதாகவும் மற்றும் மாநகர நிர்வாகிகளும் கார்த்திகேயனிடம் அவ்வப்போது பெற வேண்டியதை பெற்று கார்த்திகேயனுக்கு துதிபாடி வருவதாக தி.மு.க., தொண்டர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

வேலூர் மாநகராட்சியை பொருத்தவரை 60-வார்டுகளை உள்ளடிக்கியது. 60 வார்டுகளில் 32 வார்டுகளுக்கு கார்த்திகேயன், தான் சார்ந்த சமூகத்தினருக்கு ஏற்கனவே நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் மேற்படி சுட்டி காட்டிய நிர்வாகிகளை சரிகட்டி வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் மீதம் உள்ள இஸ்லாமியர்கள், தலித்துக்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளில் அங்கே இவர் சமூகத்தினரை நிற்க வைக்கமுடியாது என்பதால் வேறு வழியின்றி அந்த வார்டுகளில் கட்சி உண்மை விசுவாசிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் இவரது சொல்லுக்கு கட்டுப்படும் நபர்களுக்கு வாய்ப்பு அளித்ததாக அப்போது அதிருப்தி தி.மு.க.,வில் நிலவிவந்தது.

வேலுர் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஏற்கனவே புதிய நீதி கட்சி தமிழகத்தில் முக்கிய பெரிய கட்சியாக உருவெடுக்கும் என கருதி அக்கட்சியில் இணைந்து செயல்படவும், பின் புதிய நீதி கட்சி தாம் எதிர்பார்த்தபடி புதிய கட்சியை மக்கள் அங்கீகரிக்கவில்லையே! அது போல் நாம் நினைத்த உயரத்தை அரசியல் வாயிலாக அடைய முடியவில்லையே என கார்த்திகேயன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவந்தாராம்.

வேலூர் மாவட்ட தி.மு.க.,வில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி., மாவட்டசெயலாளர், மாவட்ட அவைத்தலைவர் என்ற பதவியை வகித்த மூத்த அரசியல்வாதி என்று தி.அ.முகமதுசகியை குறிப்பிட்டாலும், கடந்த காலத்தில் கட்சி தலைமை வாயிலாகவே ஒருமனதாக பதவிகள் பெற்று, அதன்பின் அவரது செயல்பாடுகளால் தொண்டர்கள் பலத்தை பெற முடியாமல் தனது அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகும் என்பதை உணர்ந்து தொடர்ந்து அரசியல் செய்ய என்ன செய்யலாம் என யோசனையில் இருந்த முகமதுசகி, கார்த்திகேயன் புலம்பல் அறிந்து கார்த்திகேயனை அனுகி அவரை மூளை சலவை செய்து நீ நினைத்தது நடக்கும் அதற்கு நான் துணை நிற்கிறேன் என கூறி தி.மு.க., தலைவர் கருணாநிதி வேலூர் பொது கூட்டத்திற்கு வந்த போது கார்த்திகேயனை தி.மு.க.,வில் இணையும்படி தி.அ.முகமதுசகி இணைத்துள்ளார். அதன்பின் கார்த்திகேயன் தனது பண செல்வாக்காலும் தனக்கென தி.மு.க.,வில் ஆதரவாளர்களை பெருக்கி கொள்ளவும், முகமதுசகியை முன்நிறுத்தி தி.மு.க., தலைமையிடம் தன்னை உயர்வாக பேசும்படி செய்ததாலும் 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர், பின் நகராட்சி தலைவராகவும் கார்த்திகேயனுக்கு கட்சி தலைமை வாய்ப்பு அளிக்க, அடுத்து வேலூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய போது மு.க.ஸ்டாலின் கார்த்திகேயனுக்கே மேயர் அந்தஸ்தை வழங்க, அதுமுதல் மு.க.ஸ்டாலினுடன் கார்த்திகேயன் பணிவுடன் பழகி நெருக்கத்தை உருவாக்கி கொண்டதால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதிக்கு கார்த்திகேயனுக்கு தி.மு.க., தலைமை வாய்ப்பு அளித்தது. இவருக்கு எதிராக போட்டியிட்ட அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் ஜனநாயக மக்கள் கட்சியை சேர்ந்த ஆருண் ரசித்திற்கு வாய்ப்பு அளிக்க இதற்கு முன் வேலூர் பாராளுமன்றத்திற்கு இஸ்லாமியர் சிலர் நின்று வெற்றிபெற்றவர்கள் தொகுதியை சாராதவர்கள் என்றதோடு தொகுதி பக்கமே சரிவர வருவது கிடையாது என்பதாலும் கார்த்திகேயனுக்கு அதிஷ்டகாற்று வீசியது.

உள்ளாட்சி தேர்தல் தேதி எப்படியும் விரைவில் அறிவிக்கப்படலாம் என ஏற்கனவே தி.மு.க.,வில் வாய்ப்பு கேட்டு வாய்ப்பு கிடைக்காத சிலரும் காங்கிரஸ் கட்சியினர் இம்முறை எப்படியும் வெற்றி வாய்ப்பு உள்ள வார்டை பெற முயல்வதாகும் அறிந்த கார்த்திகேயன், இதற்கு முன் நான் முடிவு செய்தது செய்தது தான். இதில் எந்த மாற்றமும் ஏற்பட விடமாட்டேன் என கொக்கரிக்கிறாராம். அதனால் தி.மு.க.,வின் மூத்த நிர்வாகிகள் சிலர் ஒன்ட வந்த பிடாரி! ஊர் பிடாரி என்பது போல் தி.மு.க.,வின் உண்மை விசுவாசிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு தான் சார்ந்த சமூகத்தினரை அதிக அளவிலும், தனக்கு துதி பாடும் மாற்று சமூகத்தை சார்ந்த சிலரையும் தனது ஆதரவாளர்களாக உடன் வைத்துக்கொண்டு அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செல்வது போல் கார்த்திகேயன் மாய தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவிற்குள் ஆங்கிலேயர்கள் கொஞ்ச கொஞ்சமாக ஊடுருவி இந்தியர்களை அடிமைப்படுத்த முயன்றது போல் கார்த்திகேயன் தான்தோன்றித்தனமாக தான் சார்ந்த சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளித்து தி.மு.க.,வின் கொள்கையை அழித்து வருகிறாரோ? என்ற சந்தேகம் உடன் பிறப்புகள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு முன் வேலூர் நகர செயலாளராக இருந்த அ.மா.ராமலிங்கமும் கார்த்திகேயனும் ஒரே சமூகம் என்றாலும் கட்சிக்கு உழைப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து கட்சியை வளர்த்து வந்த அ.மா.ராமலிங்கத்தை முகமது சகியும், கார்த்திகேயனும் இணைந்து ராமலிங்கத்திற்கு கட்சியில் முக்கிய பதவி கிடைக்காதவாரு செய்துவிட்டனர். தி.மு.க.,வை பொறுத்தவரை ஆதிக்கமற்ற சமூதாயம் அடைந்தே தீருவோம். சமூக நீதி காப்போம் சமுத்துவமாக அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். சாதி பித்து எனும் சனி ஒழிந்தால் தான் சமுத்துவம் எனும் ஞாயிறு பிறக்கும் என்று தி.மு.க., தலைவர் மு.கருணாநிதி தனது குறளோவியம் என அவர் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அப்படிப்பட்ட கட்சி தி.மு.க., என்று பறை சாட்டிக்கொண்டாலும் வேலூர் தி.மு.க.,வில் நிலவும் மேற்படி பிரச்சனைகளுக்கு தி.மு.க., தலைமை என்ன கூறப்போகிறது.

இது குறித்து தி.மு.க., முதன்மை செயலாளர் துரைமுருகனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் வேண்டியவர்கள் சுட்டிக்காட்டி கேட்டபோது. அதற்கு துரைமுருகன் நான் சாதி பார்த்து அரசியல் செய்து இருந்தால் மாவட்டத்தில் பல வன்னியர்கள் கட்சியிலும், பொதுவாழ்வு பதவிகளிலும் பல பதவிகளை என்னால் பெற்று தந்து இருக்க முடியும், அதுபோல் நான் எனது கட்சி பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் தி.முக., மாவட்டத்தால் பலவீனமடைய நான் காரணமாகி இருந்திருப்பேன். நான் அப்படி செய்யவில்லை. கார்த்திகேயன் அரசியல் என்பது ஏற்புடையது இல்லை. மீண்டும் தி.மு.க.,வின் தற்போது இலக்கு உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சட்டமன்ற தேர்தல் வந்துவிடும் போல் சூழல் நிலவுகிறது. அதையும் மீறி உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் மட்டும் இல்லாது தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும். இத்தருணத்தில் நான் வேலூர் மாநகராட்சி தேர்தல் பிரச்சனையில் அதிக கவனம் காட்ட விரும்பவில்லை. உண்மையாகவே வேலூர் தி.மு.க.,வில் சாதி அரசியல் புகுத்த கார்த்தி முற்பட்டால் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற நிலைதான் எதிர்காலத்தில் கார்த்திகேயனுக்கு ஏற்படும் என்கிறாராம் துரைமுருகன்.

எது எப்படியோ வேலூரில் புதிய நீதி கட்சி கட்டுபாட்டில் இயங்குகிறதா வேலூர் தி.மு.க.,? என்ற விமர்சனம் எழுகிறது. எனவே நம்மை பொருத்தவரை நல்ல காலம் இருக்கும் வரை ராகுகாலம் எதுவும் செய்யாது என்பார்கள். அதுபோல் வேலூர் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தி.மு.க., கட்சியில் இணைந்து குறுகிய காலத்தில் உயர் பதவிகளை பெற்றுவந்தது நல்லகாலம் என்றாலும் ராகுகாலம் என்பது துரைமுருகன் சுட்டி காட்டியது போன்று நிகழலாம் என்பதே நிதர்சனம் என்பதை வேலூர் தி.மு.க.,வில் தகவல் கசிவுகளை கூறியுள்ளோம். இனி தி.மு.க., தலைமை நடவடிக்கை பொருத்தே வேலூர் தி.மு.க.,வின் வளர்ச்சி இருக்கும் என தெரிய வருகிறது.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518