Menu

Article

0 Comment

நோய்களை பரப்பும் ஆனந்த பவன் ஹோட்டல் கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

Categories: 

திடீரென்று கழிவுநீர் கால்வாயில் கழிப்பிட கழிவு நீரும், ஹோட்டல் கழிவு நீரும் கலந்து கழிவு நீர் கால்வாய் நிரம்பி மக்கள் நடமாடும் இடமெல்லாம் துர்நாற்றத்துடன் பாய்ந்துக் கொண்டிருந்ததை கண்டு மக்களும் அந்த பகுதி கடைக்காரர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் நகர்ந்துவிட்டார்கள் என்றார்கள் அங்கிருந்த பொதுமக்கள் ஆதங்கத்துடன். குப்பைகளாலும், கழிப்பிட கழிவு நீராலும், ஹோட்டல் கழிவு நீராலும் கடலூர் நகரமே துர்நாற்றத்தால் மாசு அடைந்து வருகிறது. ஆனால் இந்த மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவே மாட்டேங்குது என்ற கவலையுடன் அந்த துயர சம்பவத்தை விவரிக்க தொடங்கினார்கள் நம்மிடம் ராஜா, வைரக்கண்ணு, மதி, மற்றும் சில சமூக நல அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் சில நாளிதழ் நிருபர்களும். சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடுத்துபவர்கள் மீது கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம்தான் மக்களையும், இயற்கை வளங்களையும் காப்பாற்ற முடியும் என்று தொடங்கிய அவர்கள் கடலூர், மஞ்சக்குப்பம், தலைமை தபால் நிலையம் அருகில் இருக்கிறது ஹோட்டல் ஆனந்தபவன், இதன் உரிமையாளர் நாராயணன் இந்த ஹோட்டல் ஐந்து கிளைகளாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டல்களை நிர்வகித்து வருபவர் அவருடைய மகன் ராம்கி. இவர்கள் படித்த மேதாவிகள். கடலூர் மண்ணுக்கு என்றுமே மகத்தான பெருமை உண்டு. அந்த பெருமையை சீர்குலைத்து கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பணத்தாசையால் மக்களைப் பற்றி கவலைப்படாமல் நோய்களை பரப்பிக்கொண்டு, ஹோட்டலை நடத்தி வருகிறார் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத் தலைவரும் மற்றும் வியாபாரிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் நாராயணன் மற்றும் அவருடைய மகன் ராம்கி. இந்த ஹோட்டல் ஆனந்தபவனைச் சுற்றிலும் கடலூரின் இதயமாக விளங்கும் அரசு தலைமை மருத்துவமனை, தலைமை தபால் நிலையம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட வருவாய் அலுவலகம், மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பு அலுவலகம் மற்றும் பல அரசு துறை சார்ந்த மாவட்ட அலுவலகங்கள் இருக்கிறது. ஆனால் இவ்வளவு மாவட்ட அலுவலக அதிகாரிகள் இருந்தும் இந்த ஹோட்டல் ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணன் செய்யும் அக்கிரமங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் துணை போய்க்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக எடுபிடியாகத்தான் இருக்கிறார்கள் இந்த மாவட்ட அதிகாரிகள் என்றவர்கள்

இந்த ஆனந்தபவன் ஹோட்டல் சுமார் 26 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கழிவறை வசதி இருந்தும் கழிப்பிட கழிவுநீர் சென்றடைய செப்டிக் டேங் இல்லை. அதனால் இவர்கள் மக்களும் அரசு அலுவலகங்களும் பயன்படுத்தும் கழிவு நீர் கால்வாய் சுமார் 120 மீட்டர் நீளம் இந்த ஹோட்டல் ஆனந்தபவன் எதிரிலே செல்லுகிறது. அதனால் இந்த கால்வாயை பயன்படுத்திக் கொண்ட அவர்கள் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர்களும், அந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும் அந்த ஹோட்டலின் கழிப்பறையை பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்தும் அந்த கழிவு நீர்களான மலம், சிறுநீர் மற்றும் அந்த ஹோட்டலின் கழிவு நீர்களை அந்த ஹோட்டலின் கழிவு அறையில் இருந்து “த்துரு” கனெக்ஷன் எடுத்து நகர மக்கள் பயன்படுத்தும் கழிவு கால்வாயில் விடுவதால் மலத்தாலும், சிறுநீராலும் அந்த கால்வாய் நிரம்பி அந்த பகுதியில் உள்ள கடை பகுதிகள் துர்நாற்த்துடன் பாய்ந்துவிடுகிறது.

அதனால் சில நேரங்களில் கடைக்காரர்கள் கடை திறக்க முடியாமல் வருமானத்தை இழந்து தொழிலும் பாதிப்படைந்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இவர்கள் பயன்படுத்தும் கழிப்பிட கழிவு நீர்களால் சுமார் 120 மீட்டர் நீளமுள்ள கழிவு நீர் கால்வாய் தூர்ந்து கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் கழிவு நீரும், மழை நீரும் செல்ல முடியாமல் பக்கத்தில் இருக்கும் நகர் பகுதியில் புகுந்துவிடுகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவது மட்டும் இல்லாமல் தொற்று நோய்களுக்கும் ஆளாகி வருகிறார்கள். இதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாத மாவட்ட அதிகாரிகள் அவர்கள் கொடுக்கும் சாப்பாட்டுக்கு மண்டியிட்டு கிடக்கிறார்களாம் என்றவர்கள்.

கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவடைந்து வரும் நிலையில் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கால்வாயில் விடபட்டிருந்த ஹோட்டலின் கழிப்பிட கழிவு நீர் குழாயை நேரடியாக பாதாள சாக்கடைத் திட்ட குழாயில் இணைத்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. இதைக் கேட்ட கடலூர் நகராட்சி கமிஷ்னர் விஜயகுமாரையும் மிரட்டி வருகிறாராம் உணவுத் துறை போலிசு மற்றும் முன்னணி நாளிதழ் நிருபர் களையும் கையில் போட்டுக்கொண்டு என்ற செய்தியும் நகரம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம். இதுமட்டும் இல்லாமல் எனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்னிடம் பத்து நிருபர்கள் இருக்கிறார்கள் உன்னால் முடிந்தால் கனெக்ஷெனில் கை வைத்துப் பார் என்று மல்லுகட்டி வருகிறாராம் நகராட்சி கமிஷ்னரிடம் ஆனந்தபவன் நாராயணன்.

அரசு அதிகாரிகள், உணவுத் துறை போலீஸ் மற்றும் முன்னணி நாளிதழ் மற்றும் டி.வி சேனல்களின் நிருபர்களை கையில் போட்டுக்கொண்டு அவர் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல என்றவர்கள் அந்த ஆனந்தபவன் ஹோட்டலில் இவர்களுக்கு தனி அறையை கொடுத்து அவர் கஷ்டடியில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையானபோது விளம்பரங்களையும், வயிற்று பசியையும், போக்கி வருகிறாராம். அதனால் மாவட்ட அதிகாரிகளுக்கு எதிராகவும், நகராட்சி சட்டத் திட்டங்களுக்கு புறம்பாகவும் நடந்து கொண்டு வருகிறார் ஹோட்டல் ஆனந்தபவன் நாராயணன். ஆனால் நான்காம் தூண் என்று சொல்லப்படும் பத்திரிக்கை துறையைச் சேர்ந்த நிருபர்கள் இதை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு கொடுக்கும் 100, 200 ஐ வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற நிருபர்களால்தான் ஒட்டுமொத்த பத்திரிக்கை துறைக்கும் களங்கம் உண்டாகிறது என்று நொந்துக்கொண்ட அவர்கள் இந்த ஹோட்டலில் சாப்பிட்டவர்களுக்கு ஜீரணமாகாமல் வயிற்று வலியால் துடித்தவர்கள் பலபேர் அந்த அளவுக்கு உணவு ருசியாக இருக்க பல மூலப் பொருட்களை கலந்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க ஹோட்டலில் நுழைந்தோம் சாப்பிட ஹோட்டல் முழுவதும் குப்பை கிடப்பது போல் துர்நாற்றம் மண்டி கிடந்தது, பசியுடன் துர்நாற்றமும் கலந்து நம்மலை மயக்கத்துடன் நிலைக்குலைய வைத்தது.

அந்த சுகாதாரமற்று கிடக்கும் ஹோட்டலின் கழிப்பிட கழிவுநீர்களின் துர்நாற்றத்தால், இந்த ஹோட்டலில் சாப்பிட வருவோர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு சாப்பிடும் அவல நிலையில் இருக்கிறது இந்த ஆனந்த பவன் ஹோட்டல். உடல் நலத்தையும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளையும், இயற்கையையும் கொஞ்ச கொஞ்சமாக அழித்துக் கொண்டு வரும் ஹோட்டல் ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணன் மற்றும் அவருடைய மகன் ராம்கி ஆகியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களிடம் வாங்குவதை வாங்கிக்கொண்டு கண்டு கொள்ளாமல் சோரம் போய்கிடக்கிறார்கள் இந்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

இவர்கள் எல்லாம் மக்களுக்கு வேலை செய்பவர்களா, பணம் படைத்த அதிகாரம் மிக்க முதலாளிகளுக்கு ஏஜெண்டாக செயல்படும் இவர்களுக்கு மக்கள் வரி பணத்தில் கொடுக்கும் அரசு சம்பளம் ஒரு கேடா.. என்று காறி துப்புகிறார்கள் ஆதங்கத்தோடு. சிந்திக்கவும், சிந்தித்ததை வெளிப்படுத்த தெரிந்தவன்தான் ஆறறிவு படைத்த மனித ஜீவன். அப்படிப்பட்ட இந்த மனித ஜீவன்தான் தங்கள் வளர்ச்சிக்காகவும் தங்களின் குடும்பம் மற்றும் ஹோட்டல் வளர்ச்சிக்காகவும் கடலூர் நகரத்தையே கலங்கடித்து வருகிறார்கள், இந்த ஆறறிவு படைத்த படித்த மேதாவிகளான நாராயணன் மற்றும் அவருடைய மகன் ராம்கி. இவர்கள் போக்கை மாற்றிக்கொள்ளாமல் திறந்தவெளியில் கழிப்பிட கழிவு நீர்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் இவர்கள் மீதும் ஹோட்டல் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களையும், கடைக்காரர்களையும் ஒன்றுதிரட்டி போராட்டத்தில் குதிப்போம் என்றார்கள் கோபம் கொப்பளிக்க...

ஹோட்டல் ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணனை இந்த 04142 233996 தொலைப்பேசியில் நம்பரில் தொடர்புகொண்டபோது தொடர்ந்து “ரிங்க்“ போய் கட்டாகிவிட்டது. யாரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் போன் வைத்திருப்பார்கள் போல, இது சம்பந்தமாக கடலூர் நகராட்சி கமிஷ்னர் விஜயகுமாரை 9443158821 இந்த நம்பரில் தொடர்புகொண்டபோது தொடர்ந்து ரிங் போய்கொண்டே இருந்த மொபைல் நீங்கள் அழைக்கும் நபர் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை என்று கட்டாகிவிட்டது. கமிஷ்னர் ரொம்ப பிசியாக இருப்பார் போல. நோய்களின் பிறப்பிடமாக விளங்கும் பேரன்புமிக்க ஹோட்டல் ஆனந்தபவன் உரிமையாளர் நாராயணன் மற்றும் அவருடைய மகன் ராம்கி அவர்களுக்கு, தங்களுடைய ஹோட்டல் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இல்லை, தங்கள் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கழிவறை வசதி இருந்தும் அந்த கழிப்பிட கழிவுநீர்களை வெளியேற்ற செப்டிக் டேங் இல்லாமல் திறந்த வெளியில் கழிவு நீர்களை விடப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயத்தை மக்களுக்கு சுட்டிக்காட்டி,

தங்கள் ஹோட்டல்களின் பெருமைகளை சமூக ஆர்வலர்களின் வேண்டுகோலுக்கு இணங்க மக்களுக்கு தெரியபடுத்த கடமைபட்டிருக்கிறோம். அதனால் தங்கள் ஆணவப் போக்கை மாற்றிக் கொள்ளவும். கார் ஸ்டேண்ட், ஆட்டோ ஸ்டேண்ட் மற்றும் பல ஆயிரம் பேர் மக்கள் வந்து புழங்கும் இடத்தை புத்தி சுவாதினமுள்ள எந்த ஒரு மனிதனும் இப்படி அசுத்தம் செய்யமாட்டான். இனிமேலாவது ஓட்டல் நிர்வாகம் திருந்துமா? இவர்களுக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட அரசு அதிகாரிகளின் போக்கை மாற்றிக் கொள்வார்களா?

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518