Menu

Article

0 Comment

நிருபர்கள் என்ற போர்வையில் மிரட்டி கல்லா கட்டும் சமூக விரோத கும்பல்! நடவடிக்கை எடுக்க தயங்கும் வேலூர் மாவட்ட நிர்வாகம்!

Categories: 

தமிழ் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள் என்றால் ஒரு தனிப்பட்ட மதிப்பு, மரியாதை இருந்து வந்தது. காலப்போக்கில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சமூக விரோத கும்பல்கள் சில நிருபர்களுடன் கைகோர்த்து கொண்டு, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றல், போதை பொருள் கடத்தி விற்பனை செய்தல், கள்ள நோட்டு அச்சடித்து மாற்றுதல், வழிப்பறி செய்தல், விபச்சாரம், ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல சமூக விரோத செயல்களை செய்து வந்தது, ஒரு கணிசமான பணத்தை சில நிருபர்களுக்கு கொடுத்து வந்தனர். காலப் போக்கில் நிருபர்களுக்கு ஏன் நாம் பங்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்த கும்பல்கள், சில குறிப்பிட்ட நாளிதழ், தொலைக்காட்சியில் பணத்தை கொடுத்து நுழைந்து மிரட்டி, கல்லா கட்டி வருகின்றனர்.

இதற்கு பணத்திற்கு ஆசைப்படும் மாவட்ட நிருபர்கள் சமூக விரோத கும்பல்கள் தினசரி, தொலைக்காட்சியில் சேர்த்து விடுகின்றனர். இதில் முக்கிய நாளிதழ், தொலைக்காட்சிகளும் அடங்கும். தமிழகம் முழுவதும் “றிஸிணிஷிஷி” என்ற போர்வையில் அட்டகாசம் செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு பகுதியில் இந்த குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தலைநகரான வேலூரில் கும்பல்கள் அதிகரித்துவிட்டன.

மணல் குவாரி உரிமையாளர்களை மிரட்டுதல், ரேசன் அரிசி கடத்துபவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்கள், கல் குவாரி, அனுமதியின்றி செயல்படும் தனியார் பள்ளிகளை மிரட்டுதல், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மிரட்டுதல், டாஸ்மார்க் பார் உரிமையாளர்கள், ஆர்.டி.ஓ., அலுவலகம், செக்போஸ்ட் ஆகியவற்றை மிரட்டி பணம் பறித்து வருவது வாடிக்கை ஆகிவிட்டது.

கல்வி தகுதியின்றி மோசடி செய்யும் ரவுடிகள், மொள்ளமாரி, முடிச்சு அவிக்கிகள், பிளாட்பாரத்தில் சுற்றி திரிபவர்கள் என பலதரப்பட்ட நபர்கள் மாத, வார, தினசரி, மற்றும் தொலைக்காட்சியில் பணம் கொடுத்து நுழைந்து விடுகின்றனர். இதனால் தினசரி நாளிதழ், தொலைக்காட்சி, வார, மாத இதழ்களின் பெயர்கள் கெட்டு போகின்றன. வேலூர் மாவட்டத்தில் பல நிருபர்களின் மீது ஆங்காங்கு உள்ள காவல் நிலையத்தில் புகார் மற்றும் திமிஸி பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களும் வேறு போர்வையில் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதை வேலூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மக்கள் தொடர்பு அலுவலகம், நமக்கேன் வம்பு என்று கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றது.

வேலூர் கலெக்டர் ராமன், உயர் காவல் துறை, மக்கள் தொடர்பு அலுவலகம் உதவியுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிருபர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து, சமூக விரோதிகள் நுழையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே போல் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நிருபர்களின் உண்மை தன்மையை அறிந்து வேலையில் சேர்க்க வேண்டும். இதை நாளிதழ், தொலைக்காட்சி, வார, மாத இதழ் ஆசிரியர், உரிமையாளர்கள் உறுவி செய்ய வேண்டும். இதுவே ஜனநாயக தூண்களின் ஒன்றான பத்திரிக்கை தர்மம், என்பதை கோடிட்டு காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518