Menu

Article

0 Comment

தூத்துக்குடியில் மனித கை-கால்களை உடைக்க தனிப்பட்டறை!! நேதாஜி சுபாஷ் சேனை பரபரப்பு!

Categories: 

தூத்துக்குடியில் மனித கை - கால்களை கொலை வெறியுடன் அடித்து நொறுக்கி உடைக்க காவல் துறையில் தனி பட்டறை வைத்திருப்பதாக, நேதாஜி சுபாஷ் சேனை பகீர் பரபரப்பு செய்தார்கள். கடந்த 25.-11.-2016 அன்று தஞ்சை, திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நேதாஜி சுபாஷ் சேனை சேர்ந்த சுமார் 1000 பேர் கை கால்களில் ரத்தம் வருவது போல் மருந்து துணி கட்டுகளோடு (சிகப்பு சாயம் பூசி) தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தார்கள். இதனால் கலெக்டர் அலுவலகம் அருகே தீடீர் பரபரப்பு ஏற்பட்டு, காவல்துறை ரொம்பவே அலர்ட்டாகியது.
பின்பு நேதாஜி சுபாஷ் சேனை ஒருங்கிணைப்பாளரும் தலைவருமான ஞிக்ஷீ.ஸ்.மகாராஜன் வழக்கறிஞர் நிர்வாகிகளுடன், தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் நேரில் சந்தித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகள் செயல்பாடுகள் மீதும், உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஸ்மிஸ் செய்திடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டும், பொதுமக்களின் அச்சத்தை போக்க தகுந்த நடவடிக்கை எடுத்து நீதி வழங்கும்படி மனு கொடுத்தார்கள். அந்த மனுவில் குறிப்பிட்ட சில வரிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்களை, சில போலீசார் கைகால்களை உடைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

அத்துடன் ஜனநாயக முறையில் மக்கள் ஏதாவது போராட்டங்களை முன்னெடுத்து சென்றாலும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதற்கு அனுமதி மறுப்பதுடன் அவ்வாறு போராடுபவர்கள் மீதும் பொய்வழக்குகளை பாய்ச்சும் கொடுமைகள் தொடர்கிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள சிலரால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை கேட்க நாதியற்ற நிலை உள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பாதிக்கப்பட்டால் அடுத்த நாளே நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும் மனித உரிமை ஆணையம் கூட, மற்ற சமுதாய மக்கள் பாதிக்கப்பட்டால் கண்டு கொள்ளாமல் இருப்பதுடன் புகார் செய்தாலும் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. இதுவும் மனித உரிமை மீறலுக்கு காரணமாகும். சில போலீசாரின் கொடூரமான செயல்களால் பல நல்ல போலீசாருக்கு வீணான கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றிருந்தது.

இந்த பரபரப்பில், நேதாஜி சுபாஷ் சேனை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இசக்கிராஜா நமது மீடியா ஹார்ன் நிருபரை சந்தித்து கூறியதாவது:-

எங்கள் தலைவர் மகாராஜன் கடந்த 9 மாசமா தூத்துக்குடி போலீசார் வழக்குகளில் சம்பந்தப்பட்ட யாரையெல்லாம் கைகால் எலும்பை அடித்து உடைத்து ஊனமுற்றோர் ஆக்கினார்கள், என்று தகவல் உரிமை சட்டம் மூலம் பதில் கேட்டிருந்தார். அதற்கு ஏழு பேர் என்று விவரம் தெரிவித்திருந்தது.

தற்போது அசோகன், மனோகரன், முருகன், புலேந்திரன், வேலு, ஜயப்பன், ராகவன் ஆகியோர் இதுகுறித்து வழக்கு நடத்துவதாகவும் தெரியவருகிறது. தூத்துக்குடி நகரில் மட்டுமே 24 பேர் போலீசாரால் கைகால் எலும்புகள் அடிபட்டு உடல் ஊனமுற்றோராய் போயுள்ளார்கள். கடந்த வாரம் கூட கோர்ட் முன்பு வக்கீல் தாக்குதல் சம்பவ வழக்கில் தொடர்புள்ள நபர்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் வீரா(எ)வீரபத்திரன் (வயது 28)அப்பகுதியில் மூடை தூக்கும் கூலிதொழிலாளி. அவர் மளிகை கடையில் பொருட்கள் வாங்கும் போது பழக்கத்தில் பணம் 140க்கு 100கொடுத்துவிட்டு மீதி நாளை இங்கு வருவேன்ல தருகிறேன் என்றதால், இருவருக்கு தகராறு ஏற்பட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார்கள் வீரா சாதியை கேட்டது சொன்னதும்? “உனக்கென்ன அவ்வளவு திமிரால்ல!” கொலை வெறியுடன் அடித்து புரட்டி எடுத்து கை விரல்களை ஒடித்து இருக்கிறார்கள்.இப்போது பாளை மருத்துவமனையில் இருக்கும் வீராவை அடையாளம் தெரியாத நபர் அடித்துவிட்டு சென்றதாக கூறும்படி மனைவியையும் மிரட்டுகிறார்கள். வீரா தொழில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்கும் வீரா மீது இதுவரை எந்த வழக்கும் கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த சின்ன புகாருக்காக போனாலும் சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்து அனுப்பலாம். ஆனால் அவர்கள் மீது கஞ்சா வழக்கு போடுகிறார்கள். இப்படி ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஒரே மாதத்தில் 6 பேர் மீது, கிலோ கணக்கில் கஞ்சா வைத்திருந்ததாக பொய்வழக்கு பதிகிறார். போலீசார்கள் நகரில் வரும்போது இளைஞர்கள் சாதாரணமாக பார்த்தாலோ, லுங்கி அணிந்து அதை மேல்மடித்து ஏற்றி கட்டி இருந்தாலோ போதும், வினை தான். காரணமே இன்றி அடிப்பார்கள். “ஏலே நீ யார்ல? என்ன சாதில?” என்று கேட்பார்கள். “ஏன்சார் சாதியை கேட்கிறீங்க?” திருப்பி கேட்டா போதும். “இவன் அவன்தாப்புல, வேன்ல ஏற்று பட்டறை க்கு கொண்டு போவோம்” என் பார்கள். இதில் தூத்துக்குடி 3ம் மைல் பாய் கடையில் வேலை பார்க்கும் சிறுவனை கூட விடாமல், அடித்து துவைத்து இருக்கிறார்கள்.

இப்படி அநாகரீகமாகவும் தரக்குறைவான வார்த்தைகளை பொதுமக்கள் மற்றும் இரவுநேரம் வியாபாரிகள் மீதும் பிரயோகிப்பார்கள். கண்ணில் படும் இளைஞர்களை மிரட்டுகிறார்கள். “ஒரு தப்பும் செய்யலயே.. ஏன் சார்..?” என எதிர் கேள்வி கேட்டால் கைகால்களை உடைத்தெரிந்து உடல் ஊனமுற்றோராக நடமாட வேண்டும். இப்படி போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறார்கள். தற்போது சிவகங்கைக்கு மாற்றாலாகி உள்ள இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்.ஐ., ஜீவமணி தர்மராஜ், எஸ்.ஐ., ஷியாம்சுந்தர், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், ஸ்ரீவை இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் மோசமான செயல்நடவடிக்கைகளை சொல்லலாம். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரல் தேவர், நாடார், பிள்ளைமார் போன்ற சமூகத்தை சேர்ந்தவர்களே ரொம்ப பாதிக்கப்பட்டு வருகின்றனர். நீங்கள் பட்டியலிட்டு பார்த்தால் தெரியும். நேதாஜி சுபாஷ் சேனை, சாதி அமைப்பு அல்ல. பொதுவாக பாதிக்கப்படும் எல்லா சமூகத்திற்கும் நீதி நியாயம் கிடைக்க போராடத்தான் உருவாக்கியுள்ளோம்.

தூத்துக்குடி கடற்கரையோரம் தெர்மல் காவல் நிலையம் ரொம்ப அமைதியான ஏரியா!. அகப்படுபவர்களை எந்த ஸ்டேஷன் என்றாலும், ரொம்ப நிசப்தமாக இருக்கும் இங்கே தூக்கிட்டு போய் வாயில் துணியை சொருகிவிட்டு கை கால்களை எலும்புகளை உடைத்து ஊனமுற்றவர்களாக ஆக்குகிறார்கள். இந்த ஸ்டேஷனுக்கு அவர்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் பட்டறையாம். மனித உரிமை மீறல்னா என்ன என்று அடாவடிபண்ணும் இவர்கள் மீது மனித உரிமை ஆணையம் மற்றும் நேர்மையான உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை டி.ஜி.பி., தென்மண்டல ஐ.ஜி., ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளோம்.

தூத்துக்குடி கலெக்டர் ரவிக்குமார் ரொம்ப ஆதங்கத் துடன் இப்படியெல்லாம் செய்வார்களா? என்று போட்டோக்களை பார்த்தவர், இன்னும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவித்தார் என்றார் மா.செ. இசக்கிராஜா. நேதாஜி சுபாஷ் சேனையின் தீடீர் அதிரடி புகார் மனுவால் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தவறு செய்யும் போலீசார்களை காப்பாற்றுமா! கைவிடுமா!!! ரொம்பவே திக்கித்து போயுள்ளது.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518