Menu

Article

0 Comment

தூங்கா  நகரில் தூங்கும் போலீஸ்  பயப்படும்  மக்கள்!!

Categories: 

மதுரை மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவத்தில் கடந்த 12 மாதத்தில் 1943 பவுன் நகை, 2 கோடியே 66 லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர். 24 மணி நேரமும் வாகன சோதனைகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மதுரை மாவட்டத்தில் வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் நடமாடவோ, மக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லவோ அச்சப்படுகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த 12 மாதத்தில், அதாவது இந்த ஆண்டு மட்டும் 137 வழிப்பறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 1943 பவுன் நகை, ரூ.2 கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் பணம் பறிபோயுள்ளது. ஆனால் குற்றவாளிகளை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பிட்டளவில் போலீசார் கைது செய்யவில்லை. இந்த தகவல் மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் டூவீலர்களை முதலில் திருடி, அந்த டூவீலர்கள் உதவியுடன் வழிப்பறியில் கும்பல் ஈடுபட்டு வருகிறது. இரவில் எங்கெங்கு சோதனைகள் நடத்தப்படுகிறது என்பதை தெரிந்துகொண்டு அப்பகுதிக்கு வருவதை இக்கும்பல் தவிர்த்து விடுகிறது. எனவே இரவு மட்டுமல்லாது, பகல் நேரத்திலும் அதிரடியாக டூவீலர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்’’ என்கின்றனர்.

‘‘மதுரையில் டூவீலர்களை திருடி வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் இன்னும் வேகம் காட்ட வேண்டும். வழிப்பறி கும்பலில் பலர் தங்களின் திருட்டு வாகனங்களுக்கு தேவையான போலி ஆவணங்கள் வைத்துள்ளனர். நகர் மற்றும் புறநகர் ஆர்டிஓ அலுவலகங்களில் ஒவ்வொரு மாதமும் பதிவாகும் வாகனங்களின் எண்கள் உரிய முகவரிகளுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். வெளியில் சந்தேகத்திற்குரிய வாகன எண்ணை போலீசார் மைக் மூலம் தெரிவிக்க அந்த எண் சரிபார்க்கப்படுவது நடைமுறை ஆகும். டூவீலர்கள் மூலம் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் தீவிரம் காட்ட வேண்டும். பொதுமக்கள் நிம்மதியாக நடக்க பொதுமான வழிகளை போலீஸ் அதிகாரிகள் செய்யவேண்டும்’’ என்கிறார் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர்.

அதுபோல், கொலைக்கும் பஞ்சமில்லை.! மதுரை மாவட்டத்தில் ஜனவரி 1ம் தேதி திருமங்கலம் அருகேயுள்ள அரசப்பட்டியில் சவுந்திரபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இதுவரை 63 கொலைகள் அரங்கேறியுள்ளன. தூங்கா நகரில் அதிகரித்து வரும் கொலை சம்பவங்களால் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். செய்யுமா இந்த அரசு.?

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518