Menu

Article

0 Comment

திருமண உதவி திட்டத்தில் தில்லுமுல்லு கில்லாடி கீதா

Categories: 

தமிழக அரசு திருமண பெண்களுக்கு வழங்கும் இலவச தங்கம் மற்றும் அதற்குரிய நிதியை பயனாளிகள் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
ஆம் அந்த அளவுக்கு பயனாளியின் பெற்றோர்களை சமூக நலத்துறையைச் சேர்ந்த முக்கிய சேவியா மற்றும் உதவி சேவியாவும் லஞ்சம் கேட்டு தொல்லைக்கு உள்ளாக்குகிறார்கள்.

உதாரணத்திற்கு விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும் சமூக நலத்துறையைச் சேர்ந்த முக்கிய சேவியா ஜெய பிரபாவும், உதவி சேவியா கீதாவும் திருமண உதவி பெறும் விண்ணப்பதாரர்களிடம் 2000 முதல் 5000 வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் விண்ணப்பங்களை அனுப்பி வைப்பார்களாம்.

முக்கிய சேவியா ஜெய பிரபா கொஞ்சம் தேவலாம் என்கிறார்கள். அலுவலகச் செலவுக்கு எனக்கு 500 மட்டும் போதும் என்று அதிலும் ஒரு நேர்மையைக் கடைபிடித்து வருவதாகவும், ஆனால் உதவி சேவியா கீதா பண விஷயத்தில் பயனாளிகளிடம் 5000 வரை கறாராக வாங்கிக் கொண்டு முக்கிய சேவியாவுக்கும் 500 தந்துவிட்டு மீதியை கீதா வைத்துக் கொள்வாராம். கீதா தான் லஞ்சம் வாங்குவதில் கிங் என்று பயனாளிகள் பதட்டத்துடன் கூறுகிறார்கள். பயனாளிகளைப் பற்றி விசாரிக்க முன்பு முக்கிய சேவியாவாக பணிபுரிந்த மலர்க்கொடி என்பவர் தனது அலுவலக ஊழியர்களோடு சென்று பயனாளிகளிடம் விசாரணை செய்வார்.

ஆனால் தற்போது கீதா, முக்கிய சேவியாவைக் கூட அழைக்காமல் தனது கணவரை அழைத்துக் கொண்டு பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று விசாரணை செய்து பயனாளிகளிடம் தனது கணவரிடம் பணத்தை கொடுங்கள் என்று கூறி வசூல் செய்கிறாராம். இதை முக்கிய சேவியா ஜெய பிரபா கண்டு கொள்வதில்லை. நமக்கு எதற்கு வம்பு என்று இருக்கிறார். இதே அலுவலகத்தில் சில வருடங்களுக்கு முன்பு பணிபுரிந்த முக்கிய சேவியா ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டி சிறைக்கு சென்றுள்ளார். அப்படியிருந்தும் உதவி சேவியா கீதா கொஞ்சமும் சளைக்காமல் திருமண உதவி பெறும் பெண்களிடம் லஞ்சம் பெற்று வருகிறார்.

மகளிர் நிகழ்ச்சி நடந்ததற்கு நிருபர்களுக்கு “கவர்” தர வேண்டும் என்று கணக்கு காட்டி 1500 ரூபாயை முன்பு இருந்த முக்கிய சேவியாவிடம் பெற்று நிருபர்களுக்கு பணம் தராமல் கீதாவே சுருட்டிக் கொண்டாராம். திருமண உதவிபெறும் பெண்கள் உதவி முக்கிய சேவியாவை கண்டாலே அலறுகிறார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல பாதுகாப்பு திட்ட பணியாளர்கள், குறிப்பாக கீதா மீது தன் பார்வையை செலுத்த வேண்டும் என்கிறார்கள் பயனாளிகள்!

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518