Menu

Article

0 Comment

ஜல்லிக்கட்டுக்காக முஸ்லிம்கள் போராட உரிமையில்லை! பாஜக தேசிய செயலாளர் H.ராஜா பேச்சு...!!

Categories: 

மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழும் தமிழக மண்ணில் பா.ஜ.க., துடைத்து எறியப்பட்டு விட்டதால் எப்படியாவது பா.ஜ.க.,வை நிலைநாட்ட இந்து முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்த பா.ஜ.க., தேசிய செயலாளர் H.ராஜா முயற்சித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் H.ராஜா கூறியதாவது... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம் அமைப்புகள், அமீர் போன்றோர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட என்ன உரிமை இருக்கிறது? மாட்டை கொன்று சாப்பிடுபவர்களுக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் போராட்டத்தில் இந்து மாணவனை முஸ்லிம்கள் தாக்கிவிட்டதாக முகநூல் வாயிலாக அவதூறு செய்தி வெளியிட்டுள்ளார்.

H.ராஜாவின் இந்த கருத்து குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் புழல் M.பஷீர் கூறியதாவது, மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடக்கூடாது என்றால் சேவல் சண்டைக்காக போராட்டம் நடத்துபவர்கள் கோழி சாப்பிடாமலா இருக்கிறார்கள்? ஆட்டை கோவிலுக்கு படைப்பவர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடாமலா இருக்கிறார்கள்? ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்துபவர்களில் அனைவரும் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களா இருக்கிறார்கள்? இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா, பா.ஜ.க., ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிறது.

வெளிநாட்டிற்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து மில்லியன் கணக்கான கோடிகளை அந்நிய செலாவனிகளாக பா.ஜ.க., பணம் சம்பாதித்து வருகிறது. பீட்டா சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ராதா ராஜன் என்ற RSS பெண்மணி. போராட்டம் நடத்தும் தமிழர்களை பொறுக்கிகள் என்று தொடர்ந்து அழைப்பவர் சுப்ரமணிய சுவாமி பா.ஜ.க.,வை சேர்ந்தவர். இப்படி முழுக்க முழுக்க தமிழ் இனத்திற்கு எதிராக இருப்பது பா.ஜ.க.,வும் RSS.

தங்களது குறைகளை மறைக்க முஸ்லிம்களுக்கு எதிராக பேசி பிரிவினையை உருவாக்குவது ஏன்? புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருகிறதோ இல்லையோ! H.ராஜாவுக்கு புத்தி வராது என்று தெளிவாக தெரிகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறும் H.ராஜா, இதே அறிவிப்பை மாணவ போராட்டத்தில் சொல்ல திராணி இருக்கிறதா

இந்து, முஸ்லிம், கிறித்தவ மாணவர்கள் ஜாதி மத பேதமின்றி பசியும், பட்டினியுமாக 5 நாட்களாக மண்ணின் உரிமைக்காக போராடினர். ஆனால் பா.ஜ.க., H.ராஜாவோ மதக்கலவரத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார். தமிழ்நாட்டு மண்ணிலிருந்து அரசியல் அநாதையாகியுள்ள ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி. விரைவில் இந்திய மண்ணிலிருந்தும் பாரதிய ஜனதா கட்சி துடைத்து எறியப்படும்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518