Menu

Article

0 Comment

கொடைக்கானலில் போதை வஸ்துகளை தலைமை இடமாக கொண்டு செயல்படும் வட்டகானல்

Categories: 

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல். இங்கு வாழும் மக்கள் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். அதே போல் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். காரணம் இதமான சீதோசன நிலை மற்றும் அழகான சுற்றுலா தளங்களான நகரின் மைய பகுதியில் கம்பீரமாக அனைவரையும் கவரும் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கஸ் வாக், தூண் பாறை என இயற்கையை கண்டு ரசிக்க நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளது.

அதேபோல் கொடைக்கானல் நகரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தான் வட்டகானல். இந்த இடம் மிகவும் பிரபலமானது. காரணம் இது கொடைக்கானலின் தனி தீவாக செயல்படுகிறது. இங்கு 300க்கு மேற்பட்ட அரசு அனுமதி பெறாத தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது. இங்கு அதிகம் வெளி நாட்டினர் மற்றும் கேரளா, கர்நாடகாவில் இருந்து குடும்பம் அல்லாத ஆண்கள் பெண்கள் என அதிகம் வந்து தங்கி செல்கின்றனர்.

காரணம் இங்கு தான் கஞ்சா, போதை காளான் போன்ற போதை வஸ்துகள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காளானுக்கு இன்னொரு பெயர் உண்டு (MAGIC MASHROOM). இதை உட்கொண்டால் 24 மணி நேரம் போதை இருக்கும். இதை ஆம்லெட்டில் தூவி சாப்பிடுகிறார்கள் அல்லது தேன் கலந்து சாப்பிடுகிறார்கள். இதன் விலை 1 டஜன் 500 ரூபாயில் இருந்து ஆரம்பம். இதை அதிகம் உட்கொள்வதால் உயிர் சேதங்கள் அதிகம் ஏற்படுகிறது. கடந்த 13.11.2016 அன்று கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஜிபின், தாமஸ் ஆகிய இருவர் இறந்துவிட்டனர். 26.11.2016 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நான்கு வாலிபர்கள் போதை தலைக்கு ஏறி செய்வது அறியாமல் ரகளையில் ஈடுபட்டு, சுற்றுலா தளமான குணா குகையில் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு வியாபாரிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் இருவருக்கு 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் போதை தெளியவில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் பல உயிர்களை பலி வாங்கும் இந்த வட்டகானல். ஆகையால் இங்கு உள்ள அனைத்து அரசு அனுமதி இல்லாத தங்கும் விடுதிகளை சீல் வைத்து, சுற்றுலா பயணிகள் இங்கு தங்க அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் மற்றும் கொடைக்கானல் வாழ் பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதை மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட கண்கணிப்பாளர் சம்பந்தப்பட்ட அனுமதி பெறாத விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518