Menu

Article

0 Comment

குடியாத்தம் அரசு மருத்துவமனையின் அவலம்! கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்

Categories: 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை தாலூக்கா மருத்துவமனையாகும். முன்னாள் முதல்வர் காமராஜரின் திருக்கரங்களால் 1958ல் புத்தொளியுடன் தொடங்கப்பட்டது. தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை விட மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2010 பிப்ரவரி மாதம் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சுமார் 4 கோடி செலவில் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டது. அதன்பிறகு மாநிலங்களவை உறுப்பினர் ராஜா நிதியில் அவசர சிகிச்சை பிரிவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லிங்கமுத்து நிதியில் கட்டிடமும், குழந்தைகள் வார்டிற்கு தனி நிதியும் ஒதுக்கீடு செய்து கட்டிடங்கள் உருவானதே தவிர, 1958ல் அளிக்கப்பட்ட அதே சிகிச்சை தான் தற்போதும் வழங்கப்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலராக உள்ள அமுதாமணி கடந்த 20 வருடங்களுக்கு முன் இம்மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக சேர்ந்து, கடந்த 6 வருடமாக இம்மருத்துவமனையிலேயே தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறார். தான் ஒரு மகப்பேறு மருத்துவராக இருந்தும் மருத்துவர் அருளரசி விடுமுறையில் செல்லும் நாட்களில் இதுவரையில் ஒரு பிரசவம் கூட பார்த்தது கிடையாது. அனைத்து கர்பினிகளையும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். எலும்பு முறிவு மருத்துவர்களாக மஞ்சுநாதன், பாபு, கஜேந்திரன் ஆகிய மூன்று பேரும் இருந்தும் விரலில் அடிபட்டால் கூட வேலூருக்கு அனுப்பி விடுகின்றனர்.

புறநோயாளிகள் சிகிச்சையில் மருத்துவர்கள் தம் விருப்பத்திற்கு ஏற்ப 9 மணிக்கு மேல் வந்து கடமைக்கு ஒரு சில நோயாளிகளை பார்த்துவிட்டு 11 மணிக்குள் சென்று விடுகின்றனர்.அரசிற்கு கணக்கு காட்ட மல்டி பர்பஸ் ஊழியர் வினோத்தை வைத்து பொய்யான பெயர்களில் ஓ.பி கணக்கு காட்டி அதிகமாக சென்சஸ் செய்கின்றனர். மருத்துவ அலுவலர் அமுதாமணியின் நிர்வாகத்திறமை இன்மை காரணத்தால்,

ஆரம்ப சகாதார நிலையத்தை விட மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை. மருத்துவர்கள் கஜேந்திரன், அருண்குமார், விமலா ஆகியோர் தலைமை மருத்துவர் அமுதாமணியின் ஆதரவால் காலையில் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப சர்வாதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர். பல மூத்த மருத்துவர்கள் இருந்தும் இரத்தவங்கி மற்றும் கனிணி பிரிவு பொறுப்புகளை மருத்துவர் அருண்குமாரிடம் வழங்கி உள்ளதால் பல மருத்துவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மருத்துவர் கஜேந்திரன் மருத்துவமனையில் உள்ள கடைநிலை ஊழியர்களை மிரட்டுவதும், தன்னுடைய பணி நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவு வாசலில் நின்று கொண்டு வரும் நோயாளிகளுக்கு என்ன நோய் என கேட்காமலே தன் கையில் உள்ள மாத்திரைகளை வழங்கி வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைப்பார். நோயாளிகள் உட்கார கூடாது என்ற நோக்கில், கட்டு கட்டும் இடத்தில் இருந்த சேர்களை அகற்றிவிட்டதால், நோயாளிகள் தரையில் படுத்துள்ளனர்.

அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நான்கு படுக்கைகள் பக்கத்திலே கனிணி வைத்து அட்மிஷன் போடுவதால் ஊசிபோடுவது முதல் சிகிச்சைக்கு வரும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சீட்டு போடும் ஊழியர்களின் பார்வை தவறான நோக்கில் உள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வினோத் என்பவர் மருத்துவர்கள் கஜேந்திரன், அருண்குமார், விமலா ஆகியோரின் ஆதரவால் சிகிச்சைக்கு வருபர்களிடம் 50, 100 எனவும், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவர்களிடம் 100, 200 என லஞ்சமாக வாங்குகிறார்.

இது மருத்துவர் கஜேந்திரனிடம் கேட்டதற்கு நாங்களே லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு சேர்ந்தோம் என கூலாக பதில் கூறுகிறார். அவசரசிகிச்சை பிரிவில் ஊழியர்களுக்கு இருந்த அறையை கஜேந்திரன் தனதாக்கி கொண்டு உபயோகப்படுத்தாமல் பூட்டியே வைத்துள்ளார். இதனால் இரவில் ஊழியர்கள் பனியிலும், மழையிலும் வாடி வதங்குகின்றனர்.

பிரச்சனைகள் உருவாகுவதற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆளுமை திறமை இல்லாத மருத்துவ அலுவலரையும், சர்வாதிகாரம் செய்யும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518