Menu

Article

0 Comment

கிருஷ்ணகிரியில்... கிறு... கிறு... வி.ஐ.பி.,க்கள் தங்கும் இடம் அருகே இரவு பகலாக நடக்கும் விபச்சாரம்... “கலெக்ஷனுக்காக” கண்டுகொள்ளாத காவல் துறை!...

Categories: 

கிருஷ்ணகிரியில் அமைச்சர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் வந்து தங்கிச் செல்லும் இடம் அருகிலுள்ள வீட்டில், இரவு பகலாக நடக்கும் விபச்சாரத்தை தடுக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திரா கர்நாடகா மாநிலத்துக்கான தமிழக எல்லையில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி. முக்கிய ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இவ்வூருக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணகிரியை தாண்டித்தான் செல்ல வேண்டும். தமிழக அமைச்சர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என வி.ஐ.பி.,க்களாக வரும் பலர் பயண நேரத்தில் இரவில் தங்குவதோ அல்லது பகல் நேரங்களில் சற்று நிழல் இளைபாரிடவோ தேர்ந்தெடுக்கும் இடமாக விளங்கி வருகிறது கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு ஓட்டல்.

பெங்களூரூ - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நகரின் எல்லையில் அமைந்துள்ளது ஓட்டல் தமிழ்நாடு வி.ஐ.பி.,க்கள் இங்கு வந்து தங்குவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மற்றும் ஊருக்கு ஒதுக்குப்புற பகுதி, மக்கள் நடமாட்டம் அதிகமிருக்காது போன்ற பல காரணங்கள். இதனால் எப்பொழுதும் தமிழ்நாடு ஓட்டலில் யாராவது சில வி.ஐ.பி.,க்கள் இருந்துகொண்டே உள்ளனர். இந்நிலையில் இந்த ஓட்டல் அமைந்துள்ள பகுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்று விசாரித்ததில் விஷயம் வெட்ட வெளிச்சமானது.

தேசிய நெடுஞ்சாலையில் நகரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சர்வீஸ் ரோட்டில் ஓட்டலைத் தாண்டி வலது புறமாக ஒரு ரோடு பிரிந்து பாறையூர் என்கிற கிராமத்துக்கு செல்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக புதிதாக பலர் இங்கு வீடு கட்டி குடியேறியுள்ளனர். இன்னமும் பல வீடுகள் கட்டப்பட்டு ஒரு புதிய டவுன் ஷீப் போன்று மாறி வருகிறது. சர்வீஸ் ரோட்டில் இருந்து இச்சாலையில் திரும்பியவுடன் வலது புறமாக ஒரு சிறிய தெரு உள்ளது. அந்த தெருவின் நுழைவின் இடது புறத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் விபச்சாரம் நடப்பது உறுதியானது. அந்த வீட்டின் உரிமையாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர். அவர் தற்பொழுது வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு, வெளியூரில் வசிக்கிறார். முதல் தளத்தில் கிருஷ்ணன் என்பவர் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக உள்ளார்.

இவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே உள்ள டாஸ்மாக் பாரை ஏலம் எடுத்து நடத்தி வந்த ஆறுமுகம் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணனுக்கு நட்பு ஏற்பட்டது. ஆறுமுகம் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். பார் நடத்தி வந்ததால், அவருக்கு காவல்துறையினரிடம் நல்ல ‘நட்பு’ இருந்துள்ளது. இதனை கிருஷ்ணன் பயன்படுத்தி சில அதிகாரிகளை கைக்குள் கொண்டுவந்தார். தான் ஏற்கனவே செய்து வந்த விபச்சார தொழிலை மேலும் விரிவுபடுத்த அது உதவியாக இருந்தது. இதற்காக அவர் பலருக்கு கப்பம் கட்டி வருவதாக தெரிகிறது. தமிழ்நாடு ஓட்டலில் வந்து தங்கும் அமைச்சர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்களை வளைப்பதற்காக கிருஷ்ணன் இந்த விபச்சாரத் தொழிலை பயன்படுத்துவதாக தெரிகிறது.

புதிதாக பதவிக்கு வந்துள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு அவருடைய தொழில் தெரியவில்லை. அவரை கையும் - களவுமாக பிடிக்க முடியாமல் முழிக்கின்றனர். சம்பந்தப்பட்ட விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு இதுபற்றி தெரியாமல் பார்த்துக்கொண்டுள்ளது நகர காவல் நிலையத்தில் சிறிய பதவிகளில் பல ஆண்டுகளாக இருக்கும் சிலராக இருக்கலாம் என்றும் உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர். விபச்சார புரோக்கர் கிருஷ்ணன் தனது மனைவியுடன் வசிக்கிறார். வாடிக்கையாளர்களை தங்கள் கட்டுப் பாட்டில் வைப்பதற்காக பல யுக்திகளை கையாண்டு வருகிறார். வெளி மாநிலத்தில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்து தனது வீட்டில் அடைத்து வைத்து இரவு பகலாக சப்ளை செய்து வருகிறார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகளையும் ஆசை வார்த்தை கூறி கிருஷ்ணன் தனது கட்டுப்பாட்டில் வைத்து விபச்சாரத்தை நடத்துகிறார்.

தன்னை அரசியல் வாதியாக காட்டிக்கொள்ளும் புரோக்கர் கிருஷ்ணன், பைனான்ஸ் நடத்துவதாக சிலரிடமும், தாபா ஓட்டல் வைத்திருப்பதாக பலரிடமும் பொய் சொல்லி வருகிறார். தங்கள் வீட்டின் அருகில் இப்படி விபச்சாரம் நடப்பதால் அந்த பகுதியில் வசிக்கும் பெண்களும், இளம் வயது பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தனக்கு எதுக்கு வம்பு என்று ஓரம் கட்டுகின்றனர். இப்படி வி.ஐ.பி.,க்கள் வந்து தங்கியிருக்கும் பகுதியில் விபச்சாரம் நடப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால், “கலெக்ஷன்” மேட்டருக்காக அமைதி காக்கின்றனரோ என்றும் சந்தேகிக்கின்றனர் அப்பகுதி பெண்கள். எது எப்படியோ, விபச்சாரம் தடுக்கப்பட வேண்டும், பெண்கள் தங்கள் வாழ்க்கையை இதில் தொலைத்துவிடக் கூடாது என்பதற்காகவும் தான் இச்செய்தியை பிரசுரிக்கிறோம்...

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518