Menu

Article

0 Comment

ஊழல்வாதியின் கூடாரமான ஊராட்சி மன்றம்

Categories: 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு முதல்நிலை ஊராட்சிதான் இந்நிலையில் உள்ளது. இங்கே ஊராட்சி செயளராக பணிபுரிபவர் சிவராஜன் இவர்தான் அந்த நல்ல மனிதர். இவரைபற்றி ஒருவரியில் சொல்லிவிட முடியாது தொடக்கத்திலிருந்து சொல்லியாகவேண்டும். சித்தரேவு ஊராட்சி மன்ற முன்னால் தலைவர் 0. ஜெயராஜ் இவருடைய மருமகன்தான் சித்தரேவு ஊராட்சி மன்ற செயலர் சிவராஜன். முன்னால் தலைவர் ஜெயராஜ் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்தார்.

ஓரிரு முறை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் பணம் செலவு செய்தும் வெற்றிபெற முடியவில்லை என்ற மனநிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தார் இப்பகுதியில் அக்கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் தங்கவேல் என்பவர். இவரின் ஆதராவால் ஆளுங்கட்சியின் ஊராட்சி மன்ற தலைவரானார்.

தொடக்கத்திலேயே தனது மருமகன் சிவராஐனை ஊராட்சி செயளராக பணியமர்த்துவதில் முனைப்பை காட்டி அதில் வெற்றியும் பெற்றார். இதற்க்காக கரன்சிகளை தாராளமாக இரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் லட்சக்கணக்கானோர் காத்திருப்பு பட்டியலில் இருக்க சிவராஐனுக்கு எப்படி கிடைத்தது இந்த பணி? இந்த ஊழலில் சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளுக்கும் பங்குஉண்டு மாமனும் மருமகனும் (ஊராட்சி தலைவர்-ஊராட்சி செயலர்)இணைந்து தங்களது பணியை (???) துவக்கினர் பசுமை வீடு வேண்டுமா? தொகுப்பு வீடு வேண்டுமா? பசுமை வீட்டிற்கு ரூபாய் முப்பதாயிரம் தொகுப்பு வீட்டிற்கு ரூபாய் பதினைந்தாயிரம் என்று லஞ்சம் நிர்ணயிக்கப்பட்டது அதேபோல் வசூல் வேட்டையும் அயோக்கிய நாதர் அருளால் அமோகமாக நடந்தது.

இதனால் கட்சியின் நற்பெயர் கெட்டுவிடும் என்று அ.தி.மு.க. ஒன்றிய பொறுப்பில் இருக்கும் தங்கவேல் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் மோதல் உருவானதாக தெரிகிறது. இதனால் தனி அணியாக செயல்பட்டார் ஜெயராஜ். என்ன செய்வார் பாவம் செலவு செய்த பணத்தை சம்பாதிக்க வேண்டுமல்லவா? வங்கி காசோலையில் கையப்பமிடும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கும் ஊராட்சி செயளருக்கும்தான் உள்ளது.

எனவேதான் தன் மருமகனை ஊராட்சி செயளராக உருவாக்கினார். காரணமில்லாமல் கணக்கில் பணம் எடுக்க வசதியாய் இருக்கும் என்பதற்காகவோ என்னவோ. பசுமை வீடு மற்றும் தொகுப்பு வீடு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொள்கின்றனர். இதையெல்லாம் விட மற்றொரு வேலையும் அரங்கேறியுள்ளது. பசுமை வீடு மற்றும் தொகுப்பு வீடுகளுக்கு பட்டா மற்றும் பத்திரம் கொடுத்து விண்ணப்பம் செய்தவர்கள் பலர்.

அந்த விண்ணப்பங்களுக்கு பல வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களில் பயணடைந்தவர் குறைவுதான். வேரொருவர் பட்டா நிலத்தில் மற்றொருவருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இவர்கள்தான் வகுத்துள்ளனர். அப்படி கட்டிக் கொடுக்கப்பட்ட பசுமை வீடுகளுக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் தொகுப்பு வீடுகளுக்கு ரூபாய் முப்பதாயிரமும் லஞ்சமாக பெற்றுள்ளனர். இதை இல்லை என்று மறுத்தால் இன்றளவும் பத்திரப்பதிவு மற்றும் பட்டா இல்லாமல் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளை நாம் நேரடியாக காண்பிக்க தயார்.

மேலும் இதே ஊரைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களும் கணிசமாக வாழ்கின்றனர் அவர்களின் நீண்டகால கோரிக்கையான குடிநீர் வசதி மற்றும் பொது கழிப்பறை வசதி செய்துகொடுக்க வேண்டும் என்பதுதான்; சாதி வேற்றுமை பார்ப்பவர்கள் இவர்களுக்கு எப்படி செய்து கொடுப்பார்கள்? இவர்கள் செய்ததெல்லாம் இவர்கள் தோட்டத்தில் ஆழ்துளை கிணறு, அங்கே குடியிருக்க வீடு, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு வீடு என தன் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்துகொண்டார்கள், மக்களுக்காக செய்தது பாதி அதிலும் புகுந்து விளையாடியிருக்கிறது ஊழல் . இவர்கள் செய்த ஊழல்கள் அனைத்தும் விரைவில் இவர்கள் முகத்திரையை கிழிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இந்திய தேர்தல் ஆணயம் சித்தரேவு ஊராட்சியை ரிசர்வ் பெண் என அறிவித்தது அதாவது இந்த ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே தேர்தலில் வேட்பாளராக நிற்க்க முடியும். இந்த அறிவிப்பு வெளியானவுடன் கொந்தளித்துப்போன மாமனும், மருமனும் இவர்களின் பேச்சை கேட்கக்கூடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக்கியுள்ளனர்.

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை (ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா) வெற்றிபெறுவது நாங்கள்தான் என இவர்கள் கூவிக்கொண்டிருந்தது நீதி தேவதையின் காதில் விழுந்திருக்கும் போல. தேர்தலை நடத்துவது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518