Menu

Article

0 Comment

அரசு மருத்துவமனைக்கு வர அஞ்சும் பொதுமக்கள்...

Categories: 

திண்டுக்கல்லில் தலைமை அரசு மருத்துவமனையில் டாக்டர்களின் அலச்சியத்தால் தொடரும் பாதிப்புகள் இதனால் மருத்துவமனைக்கு வர மறுக்கும் பொதுமக்கள்.

திண்டுக்கல் மாநகராச்சிக்கு உட்பட்ட ஏழு தொகுதிகளுக்கும் தலைமை அரசு மருத்துவமனையாக விளங்குகிறது இந்த மருத்துவமனை. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள வெள்ளோடு கிராமத்தினை சேர்ந்தவர் சார்லஸ் பிரபாகரன். கட்டிட தொழிலாளி, இவருக்கும் மகாலெட்சுமி என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகாலெட்சுமி 10 மாதம் கர்ப்பமடைந்திருந்த நிலையில் பிரசவத்திற்காக தனது மனைவி மகாலெட்சுமியை வெள்ளோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சனிக்கிழமை சேர்த்தார்.

அங்கு பிரசவ வலி ஏற்பட்டு மகாலெட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கும், தாய் மகாலெட்சுமிக்கும் உடல் நலக்குறைவு ஏற்படவே மேல் சிகிச்சைக்கு அங்கிருந்த மருத்துவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மகாலெட்சுமி குழந்தைக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்படவே, குழந்தை நல மருத்துவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மகாலெட்சுமிக்கு தொடர் உதிர போக்கு ஏற்படவே மருத்துவர்கள் உறவினர்கள் சம்மதத்துடன் மகாலெட்சுமியின் கர்ப்பப்பையை அகற்றினர். இதற்கிடையே மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை இறந்து விடவே கூலித்தொழிலாளி சார்லஸ் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் தனது மனைவியை பார்க்க திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவர்கள் மகாலெட்சுமிக்கு கர்ப்பப்பையை அகற்றியதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மருத்துவ மனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சார்லஸ் கூறுகையில், எனக்கு 26 வயதாகிறது. எனது மனைவிக்கு 23 வயதாகிறது. பிறந்த முதல் குழந்தையும் இறந்து விட்டது. எனது மனைவியின் கர்ப்பப்பையினையும் அகற்றி விட்டனர். இனி எங்கள் இருவருக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை.

என்னிடம் சம்மதம் பெறாமல் எனது மனைவியின் கர்பப்பையினை அகற்றி விட்டனர். இதுகுறித்து, மருத்துவர்களிடம் கேட்ட போது, மகாலெட்சுமிக்கு அதிக உதிர போக்கு ஏற்டவே, உயிரை காப்பற்றவே கர்பப்பையினை அகற்றினோம். இல்லை என்றால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்றனர். மேலும் சில வாரங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு எக்ஸ்-ரே எடுக்க முடியாமல் போனதால் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்பு தனியார் மருத்துவமனைக்கு காயமடைந்த சிறுவனை கொண்டு சென்றனர். இதனையடுத்து கலெக்டர் வினய் இம்மருத்துவ மனையில் 5 மணிநேர முழு ஆய்வை நடத்தி மருத்துவ அதிகாரிகளுக்கு சில உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் மீண்டும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் அலச்சியமும் தொடர்கிறது. சமீபத்தில் திண்டுக்கல் பெரியார் நகரை சேர்ந்தவர் முனியாண்டி இவரது மனைவி புவனேஸ்வரி. இவர் தனது 2வது பிரசவத்திற்காக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19ந்தேதி சேர்ந்தார். அவருக்கு ஆபரேசன் செய்து பெண் குழந்தை பிறந்தது. பின்னர் 30ந் தேதிவரை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் அவருக்கு இரத்த போக்கு செல்வதாகவும், வயிறு வீக்கம் குறையாமல் வலி எடுப்பதாகவும் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது பிறந்த குழந்தை ஆபரேசனில் சிசு நஞ்சுடன் வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், அதனால் தான் இந்த பிரச்சனையும் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமாரிடம் புகார் அளித்தபோது சிகிச்சை பெற வந்தவர்களை தரக்குறைவாக பேசி மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லை அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்களும் இல்லை.

ஆகையால் மதுரைக்கு எழுதி தருகிறோம் அங்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் திண்டுக்கல் கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த சிங்கராயர் மகன் பிரான்ஸிஸ் சேவியர் வயது (25) ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் தருமத்துபட்டி அருகே பிரான்ஸிஸ் சேவியர் ஆட்டோவை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்தார். பின்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர் பரிசோதனை செய்ததில் பிரான்ஸிஸ் ராஜா இறந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இவரது உடலை பிரேத பரிசோதனை வைப்பறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அவரது உறவினர்கள் பிரான்ஸிஸ் ராஜா கண்களை தானம் செய்வதாக கூறினர். அப்போது அங்கிருந்த உறவினர்கள் இறந்தவரின் உடலில் இதய துடிப்பு இருப்பதாக கூறி டாக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் டாக்டர் சிறிதுகூட இறக்கம் இல்லாமல் அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் துப்புறவு தொழிலாளியை பார்த்து வரச்செல்லி அனுப்பியுள்ளனர்.

மேலும் வேடசந்தூரை சேர்ந்த ஒருவர் கூறும் போது அரசு மருத்துவமனையை நம்பி வரும் கர்பிணி பெண்களிடமும் பணம் பறிப்பதை குறியாக கொண்டுள்ளனர். அவர்களும் வேறு வழியின்றி தனக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கொடுத்துவிடுகின்றனர். இதைப் பற்றி வெளியில் சொல்லமுடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வர மறுக்கின்றனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமாரிடம் கேட்கும் போது அவர் எந்த பதிலும் கூறாமல் மழுப்புகிறார். இவர்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518