Menu

Article

0 Comment

அமைச்சர் சீட்டுக்காக தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் எம்.எல்.ஏ.பாஸ்கர்! சலசலப்பில் நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க.,வினர்!!

Categories: 

ஒருபுறம் தினகரன் ஜாமீன், சசிகலா பரோல் மனு என்று ஒருபுறம் மன்னார்குடி டீம் நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கும் அலைந்து கொண்டிருக்கிறது, மறுபுறம் 20 அமைச்சர்களுடன் திடீர் ரகசிய அலோசனை நடத்தி வருகிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான டீம், இத்துடன் பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாஜலம் ஆகியோருடன் ஒரு டீம், எஸ்.சி, எஸ்,டி எம்.எல்.ஏ.க்கள் ஒரு டீம் என தற்போது அ.தி.மு.க.,வில் தினம் தினம் பரபரப்புக்கு பஞ்சமேயில்லை. இது போதாது என்று நாமக்கல் எம்.எல்.ஏ.பாஸ்கர் தனக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வேண்டுமென ஜெ.,வின் வழக்கறிஞர் செந்தில் குமார் மூலமும், தனது உறவுக்கார அமைச்சர்கள் மூலமும் தலைமைக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார் எனவும், இதனால் நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க.,வினரிடையே பெரும் சலசலப்பு உருவாகியுள்ளதாக அ.தி.மு.க.,வினர் மத்தியில் பரவலாகவே பேசப்பட்டு வருகிறது.

ஜெ.,வின் மறைவுக்கு பின்னர், சகல வேலைகளையும் செய்து முதல்வராக எடப்பாடி பழனிசாமி அமர்ந்த பின் சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் வென்ற எம்.எல்.ஏ.க்களில் செம்மலையை தவிர ஏனைய எம்.எல்.ஏ.க்களில் வெங்கடாஜலம் மட்டுமே சீனியர், மற்றவர்களனைவரும் புதியவர்கள் என்பதால் முதல்வருக்கு அடுத்த மரியாதை சேலத்தில் வெங்கடாஜலத்திற்கு இருக்கிறது எனவும், மேலும் சேலம் மாவட்ட மினிஸ்டர் பதவிக்கு இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்த்திருக்க, பக்கத்து மாவட்டமான நாமக்கல் மாவட்டத்திலோ ஏற்கனவே தங்கமணி மற்றும் சரோஜா என இரு அமைச்சர்கள் இருக்க, சரோஜாவின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட மினிஸ்டராக்கி விட்டு தனக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மாமா முறை வைத்து கூப்பிடும் அமைச்சருக்கு நிகராக வாய்ப்பு கொடுக்க வேண்டுமென கிளம்பி விட்டார் நாமக்கல் தொகுதி எம்.எல்.ஏ.பாஸ்கர் என்ற தகவலால் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான சூழ்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் அதில் எம்.எல்.ஏ.பாஸ்கருக்கு வாய்ப்பு நிச்சயம் என பெரும் பிரளயத்தை உருவாக்கியுள்ளனர் நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க.,வினர் என்ன நடக்கப்போகிறது என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Last Uploaded Images

Give us a call on +91 9884 518 518