மோடியின் பேச்சை முன்வைத்து கலாய்த்த ப.சிதம்பரம்

மோடியின் பேச்சை முன்வைத்து கலாய்த்த ப.சிதம்பரம்

மோடியின் பேச்சை முன்வைத்து  கலாய்த்த ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம். தற்போது ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் சிதம்பரம்.

அதேநேரத்தில் தமது குடும்பத்தினர் மூலமாக ட்விட்டரில் ஆக்டிவ்வாகவும் சிதம்பரம் இருந்து வருகிறார். இதனிடையே அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்பும் கலந்து கொண்டார்.

இதில் பேசிய பிரதமர் மோடி தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் எல்லோரும் செளக்கியம் என குறிப்பிட்டார். இதனை முன்வைத்து தமது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம், வேலைவாய்ப்பின்மை, வேலை இழப்புகள், குறைவான கூலி, கும்பல் வன்முறைகள், காஷ்மீரில் இயல்பு முடக்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்தல் ஆகியவற்றைத் தவிர்த்து அனைவரும் செளக்கியம் என கிண்டலடித்துள்ளார்.