உலகக் காதலர்களின் நெஞ்சில் தீராத காதல் உணர்வைக் கொடுப்பது தாஜ்மஹால் ஆகும்.ஷாஜகான் தன்  காதல் மனைவி மும்தாஜுக்காகக் கட்டி எழுப்பிய இந்த மாபெரும் உலக அதிசயத்தைப் பார்க்க யாருக்குத்தான் ஆர்வம் இல்லாமல் இருக்கும்? ஆனால் தற்போது இதைச் சுற்றிப்பார்க்கச் செல்வோர் இனிமேல் 3 மணிநேரம் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் எந்தக் காலத்தில் மாறாத காதல்சின்னத்தில் அழகுடன் இருக்கும் என்ற பெருமையுடையது நம் நாட்டில் உள்ள தாஜ்மகால். இது உலகில் உள்ள 8 உலக அதிசயங்களில்ஒன்றாகும்.
அதனால் இதைப்பார்க்க ஏராளமான  மக்கள் தினமும் தாஜ்மகாலை சுற்றிப்பார்த்துவருகின்றனர். இதற்கு நுழைவுக்கட்டணமாக ரூ.50ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தப்பட்டது. வெளிநாட்டவர்க்கு ரூ1300 ஆக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க இனிமேல் வெறும் 3 மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுமென்று இந்திய தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
ஆனால், சுற்றுலாவுக்கு வருவோர் தாம் குறிப்பிட்ட நேரத்த்துக்குப் பதிலாகத் தாமதாக வந்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது புதிதாக நுழைவுச்சீட்டு வாங்கியர்வர்களே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
நிச்சயமாக மக்கள் இதனால் அதிருப்தி அடைவார்கள் என்றும் , குறைந்த நேரத்தில் சுற்றிப்பார்ப்பதில் உண்டாகும் தாமத்தாலும், 3 மணிநேரத்தில் எல்லாவற்றையும், பார்க்கமுடியாமல்  ஏமாற்றம் அடைவர்கள் என்று மக்கள் தெரிவித்துவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *