பாட்னா : பீகாரில் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில் சுமார் 125 குழந்தைகள் உயிரிழந்தது. இந்தப் பாதிப்பிலிருந்து அந்த மாநில நிர்வாகம் மீண்டு வருவதற்குள் கயாவில் உள்ள அனுராக் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்டதாக  22 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 6 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாட்னாவில் இருந்து ஒரு மருத்துவக் குழுவினர் கயாவிற்கு விரைந்துள்ளனர். மேலும் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையை மேலும் தீவிரப்படுத்த பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *