“ஈஸ்வர்” படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பிரபாஸ். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருகிறார். இவர் நடித்த “பாகுபலி” திரைப்படம் உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட பாகுபலிஇரண்டாம் பாகம் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்தது.

சில வருடங்களுக்கு முன்பு பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று வதந்தி பரவி வந்தது. பின்னர் அவர்கள் இருவருமே அந்த செய்தியை மறுத்து விட்டனர். நடிகைதமன்னாவுடன்காதல் என்றும் ஒரு கிசுகிசு பரவியது. இதைத்தொடர்ந்துவேறுசில பெண்களின் புகைப்படங்கள் வெளியாகி அவர்களில் ஒருவரைத்தான் பிரபாஸ் மணக்கப்போவதாக செய்திகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இவை அனைத்தும் பொய் என்று நிரூபணம் ஆகவுள்ளது. ஆம் பிரபாஸிற்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் திருமணம் என்று அவரது வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சாஹோ படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபாஸுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி பரவி வருகிறது. பிரபாஸின் மாமா மற்றும் சகோதரியும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது பிரபாஸுக்கு 39 வயது நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மோஸ்ட் சிங்கிள் என்று புகழப்படுபவர் பிரபாஸ். இப்போது அவருக்கு திருமண்ம நடக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *