நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. அங்குள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று 7-வது நாளாக மழை கொட்டியது. இதன் காரணமாக அங்குள்ள ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் அனைத்தும் அங்குள்ள அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு, கனடா உள்ளிட்ட அணைகளுக்கு வந்தது. இதனால் அந்த அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.  அவலாஞ்சியில் 4 நாட்களில் 258 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயகுமார் தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தாழ்வான பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உதகை, கூடலூர் வட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு கூடுதல் கவனம்  செலுத்தப்படுகிறது.வெள்ளம் பாதித்த கோவை – நீலகிரி மாவட்டத்தில் 55 முகாம்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வெள்ள நிலமை கட்டுப்பாட்டில் உள்ளது” என்றார்.#mediahorn.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *