நள்ளிரவில் அலறிய கேவி குப்பம்.. வானத்தில் இருந்து விழுந்த பளிச் பளிச் மர்ம பொருள்..

நள்ளிரவில் அலறிய கேவி குப்பம்.. வானத்தில் இருந்து விழுந்த பளிச் பளிச் மர்ம பொருள்..

நள்ளிரவில் அலறிய கேவி குப்பம்.. வானத்தில் இருந்து விழுந்த பளிச் பளிச் மர்ம பொருள்..

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கவசம்பட்டு பகுதியில் வானத்திலிருந்து நேற்றிரவு மர்மமான பொருள் வந்து விழுந்தது. அந்த பொருட்கள் பளிச் பளிச் என எரிந்ததால், மக்கள் அதை பார்த்து பயந்துவிட்டனர்.  அந்த மர்ம பொருளில் 2 சிறு எல்இடி விளக்குகள் எரிந்து கொண்டு இருந்தன. அதனால் உடனடியாக கே.வி.குப்பம் போலீசாருக்கு தெரியப்படுத்தினார்கள். விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து தடவியல் துறைக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து மர்ம பொருளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.

ஷாக்.. ஒருத்தர் துணை முதல்வர்.. இன்னொருத்தர் கிளாஸ் வாத்தியார்.. 4ம் வகுப்பு மாணவியை சீரழித்து நாசம் அது வெடிபொருள் இல்லை என்பது மட்டும் உடனடியாக தெரியவந்தது. மேலும் வானிலை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பொருள் என்றும், மழை,வெயில், மேகமூட்டம் உள்ளிட்ட வானிலையை அறிய பயன்படுத்துவது என்று விளக்கம் அளித்த அதிகாரிகள், மர்ம பொருள் முழு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இதையடுத்துதான் பொதுமக்கள் நிம்மதி ஆனார்கள். ஆனால், இந்த மர்ம பொருள், எங்கிருந்து அனுப்பப்பட்டது? எப்படி வானத்திலிருந்து விழுந்தது? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் திடீரென வானத்தில் இருந்து வந்து விழுந்த பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.