காதலும் நட்பும் உண்மையாகவே திரைப்படங்களில் மற்ற உணர்ச்சிகளை விட எப்போதும் மேலோங்கியே இருப்பதற்குக் காரணம் அந்த உறவுகளின் உண்மைத்தன்மை தான். அதனால் தான் காதல் கதைகளும் நட்பு பற்றிய விஷயங்களும் காலகாலத்திற்கும் நம் மனதில் நச்சென்று அப்படியே பதிந்துவிடுகின்றன. அதில் நட்பைப் பற்றிய சூப்பரான நட்பைப் பற்றிய படங்களின் தொகுப்பைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மௌனம் பேசியதே (2002) சூர்யா, த்ரிஷா மற்றும் லைலா நடித்த படம் தான் மௌனம் பேசியதே. இதில் சூர்யா த்ரிஷாவைக் காதலிப்பார். லைலாவும் சூர்யாவும் நல்ல நண்பர்கள். ஆனால் லைலாவுக்கு காதல் ஏற்பட்ட போது, அந்த காதல் கண்டுக்கொள்ளப் படாது. அதனால் அவள் பிரிந்து சென்று விடுவாள். ஆனால் இருவருக்கும் இருந்த பரஸ்பர நட்பு அவர்களுக்கு மாறாமல் இருந்தது. அதனால் தான் இறுதியில் அவர்களுக்குள்ளான நட்பும் காதலும் புரிந்தது. MOST READ: முடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா?…

நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது? பிரியாத வரம் வேண்டும் பிரசாத் மற்றும் ஷாலினி நடித்த பிரியாத வரம் வேண்டும் திரைப்படம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நட்புக்கு எடுத்துக்காட்டான படமாக நினைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய தலைமுறை நட்பு எப்படி காதலாக மாறும் என்ற கேள்வி ஏற்பட்டாலும் கூட, அந்த நட்பு என்ற செயலைக் கொஞ்சமும் மீறாமல் இருந்தார்கள் என்ற பெருமையும் ஆண், பெண் நட்புக்கான மரியாதையும் இந்த இடத்தில் ஏற்படுகிறது.

கண்ணெதிரே தோன்றினாள் (1998) கரணுக்கும் பிரசாந்துக்கும் இருந்த நட்பின் நெருக்கம் மற்றும் உறவு காதலையே இரண்டாம்பட்சமாக இருக்க வைத்தது. அதுவே நட்பில் கரணுக்கு விக்னேஷ் செய்த துரோகத்தால் என்ன நடந்தது என்பதை விளக்கும் படம் தான் இந்த கண்ணெதிரே தோன்றினாள். இருவர் (1997) இருவர் திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் 1997 இல் வெளிவந்தது. பொதுவாகவே மணிரத்னம் திரைப்படத்தில் நட்புக்கு என ஒரு உயர்ந்த மரியாதை உண்டு. அதில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பு பற்றி இந்த படம் பேசியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *