நாங்குநேரி, விக்கிரவாண்டி வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி  வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல்

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முறையே நவம்பர் 9, நவம்பர் 2 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசுகையில் மகாராஷ்டிரம், ஹரியானாவில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அத்துடன் தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும். புதுவை காமராஜர்நகர் சட்டசபை தொகுதிக்கும் அக்.21-ஆம் தேதி நடைபெறுகிறது. இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.