திருவாரூர் திருடன்.. முரட்டு முருகன்.. 11 வருஷ சர்வீஸ்..

திருவாரூர் திருடன்.. முரட்டு முருகன்.. 11 வருஷ சர்வீஸ்..

திருவாரூர் திருடன்.. முரட்டு முருகன்.. 11 வருஷ சர்வீஸ்..

லலிதா ஜூவல்லரி கொள்ளையில் மிகப்பெரிய நெட் ஒர்க் இருக்கும் என்று ஆரம்பத்தில் இருந்தே நம் போலீசார் சந்தேகித்து வந்தனர். அதன்படியே கொள்ளையை நடத்தியது நாடு முழுக்க கைவரிசையை காட்டிய முருகன் என்பவன்தான் என போலீசார் கண்டறிந்துள்ளனர். நேற்று பைக்கில் சிக்கிய 2 பேரில் ஒருவன்தான் சுரேஷ்.

இந்த சுரேஷ் போலீசாரை பார்த்ததும் தப்பிவிட்ட நிலையில்தான், அவன் பிரபல கொள்ளையன் முருகனின் தம்பி என்று தெரியவந்தது. இதையடுத்துதான் லலிதா ஜூவல்லரி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் முடிவு செய்தனர். மொத்தம் 8 பேர்..

ஆளுக்கு 5 கிலோ நகை.. கொள்ளையன் மணிகண்டன் சிக்கியது எப்படி.. பரபர தகவல்கள் l பர பர பின்னணி இப்போது இந்த கொள்ளையன் முருகன் பற்றிய பரபர தகவல்களையும் போலீசார் தெரிவித்துள்ளனர். முருகனுக்கு ஒரு பிரபல சினிமா பட தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்பதுதான் சின்ன வயசு கனவாம்.. அதுதான் லட்சியமாம். இதற்காகவே பாலமுருகன் என்ற பெயரில் சினிமா கம்பெனி தொடங்கி உள்ளான். முருகனின் முதல் படம் - மனாசா வினாவா என்பது. 50 லட்சம் முதலீடு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறான்.

 அந்த படத்தில் நடித்த ஹீரோயினுக்கு வெறும் 6 லட்சம் ரூபாய்தான் சம்பளமும் தந்திருக்கிறான். இந்த படத்தில் கொள்ளையன் சுரேஷும் நடித்திருக்கிறானாம். ஆனால் இந்த படம் வெளியாகாமலேயே போய்விட்டது. இதனால் நொடிந்து போன முருகன், விட்டதை பிடிக்க கொள்ளையில் ஈடுபட்டுள்ளான்.

கொள்ளை அடித்ததை கொண்டு சினிமா கம்பெனியில்தான் முதலீடு செய்ததாக ஏற்கனவே பெங்களூரில் போலீசிலும் முருகன் வாக்குமூலம் தந்துள்ளான். மக்களின் கவனத்தை திசை திருப்பி நகை, பணம் பறிப்பவதில் முருகன் ஸ்பெஷலிஸ்ட் என்கிறார்கள். 200 கைது வாரண்ட்கள் வரை நிலுவையில் உள்ளதாம் முருகனின் சொந்தக்காரர்கள் திருவாரூர், நாகை என பல பகுதிகளில் இருப்பதால், அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கைவரியை காட்டிய இந்த திருவாரூர் திருடன் முருகன் சிக்கினால், பல திடுக் தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.