தியேட்டரை அடித்து துவம்சம் செய்த .. அமமுக நிர்வாகி

தியேட்டரை அடித்து துவம்சம் செய்த .. அமமுக நிர்வாகி

தியேட்டரை அடித்து துவம்சம் செய்த .. அமமுக நிர்வாகி

சிதம்பரத்தை அடுத்த குமராட்சி அமமுக ஒன்றிய செயலாளரான இருப்பவர் மில்லர். இவர் தனது மனைவியுடன் காப்பான் படம் பார்க்க வடுகநாதன் தியேட்டருக்கு நைட் ஷோ வந்தார். அப்போது, தன்னுடைய காரை பார்க்கிங்கில் நிறுத்தாமல் தனியாக நிறுத்தினார்.

இதை பார்த்த தியேட்டர் மேனேஜர் மரி அலெக்சாண்டர், பார்க்கிங்கில் கொண்டு போய் காரை நிறுத்துமாறு மில்லரிடம் சொல்லி உள்ளார். இதற்கு மில்லர் மறுப்பு தெரிவிக்கவும், 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு தகராறு முற்றியது.

பின்னர், கூடவே மனைவி நின்றிருந்ததால், "இரு உன்னை வந்து கவனிச்சிக்கறேன்" என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றுவிட்டார். பின்னர், படம் முடியும் நேரத்திற்குள் அதே பகுதியை சேர்ந்த கூலிப்படையினர் 12 பேரை தியேட்டருக்கு வரவழைத்து, மரிஅலெக்சாண்டரை அவர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளார்.

கூலிப்படையினர் மேனேஜரை விரட்டி, விரட்டி தாக்கி உள்ளனர். மேலும் தியேட்டரில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து நொறுக்கினர். அப்போதும் ஆவேசம் அடங்காமல், மேனேஜரின் கையை முறித்து உடைத்தனர்.

இதையடுத்து, தியேட்டரில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்க்கும்போது, தியேட்டரையே துவம்சம் செய்திருந்தது தெரியவந்தது. இந்த கும்பலில் முக்கிய நபராக வக்கீல் பிரபு உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். தற்போது இந்த அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.