வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது.
இதுதவிர துரை செந்தில்குமார், ராம்குமார் இயக்கத்தில் தலா ஒரு படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தள்ளிப்போய் வரும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பேட்ட படத்தை தவிர்த்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய அனைத்து படங்களுக்கும், சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். அதேபோல் தனுஷின் கொடி, வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசீனோவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *