சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.28,896 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பத்து நாட்களாகவே தங்கத்தின் விலை உயர்நது வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 29 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.3612-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் ஒரே நாளில் 19 டாலர் அதிகரித்து 1516 டாலராக உள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி 90 காசுகள் அதிகரித்து ரூ.48.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

8 மாதத்தில் 4,656 உயர்ந்ததால் நகை வாங்குவோர் கடும்  அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த மே மாதம் முதல் உயர்ந்து வருகிறது. கடந்த 1-ம் தேதி ஒரு சவரன் 26,480, 2-ம் தேதி 27,064, 3-ம் தேதி 27,328, 5-ம் தேதி 27,680, 6-ம் தேதி 27,784, 7-ம் தேதி 28,376, 8-ம் தேதி  28,464, 9-ம் தேதி 28,552க்கும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 10-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 3,582-க்கும், சவரன் 28,656-க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *