டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியின் மூன்றாம் எண் நுழைவு வாயில் அருகே கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்டு ஒரு மர்ம பார்சல் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளியளவில் தகவல் கிடைத்தது.
Image result for ஒரு கிலோ தங்கக்கட்டி
உடனடியாக, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அந்த மர்ம பார்சலை கையில் எடுத்த அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர்.
டெல்லி சர்வதேச விமான நிலையம்

அதற்குள் ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டி இருந்தது. வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்திவந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளின் கெடுபிடிக்கு பயந்து அதை கீழே போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 35 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *