டிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்: 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள்

டிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்: 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள்

டிக்டாக் வீடியோவால் வந்த விபரீதம்:  28 குடும்ப பெண்களின் வீடியோக்கள்

தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.  கல்லூரி இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் டிகடாக்கில் தங்கள் நடப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளத்தில் பகிரப்பட்ட சம்பவத்தால், பெண்கள் கலக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்தில் மட்டும் 28குடும்பப் பெண்களின் டிக்டாக் வீடியோக்களை சமூக விரோதிகள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையறிந்த சம்பந்தப்பட்ட பெண்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து காவல்துறையினரை அணுகி ஆபாச இணையதளங்களில் இருந்து அந்த வீடியோவை மட்டும் நீக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து வருகின்றனர்.