ஒரு வாரம் வங்கிகள் மூடப்படுகிறதா.. பீதியில் மக்கள்..

ஒரு வாரம் வங்கிகள் மூடப்படுகிறதா.. பீதியில் மக்கள்..

ஒரு வாரம் வங்கிகள் மூடப்படுகிறதா.. பீதியில் மக்கள்..

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக உண்மையில் வங்கிகள் எத்தனை நாட்கள் மூடப்பட உள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு வரும் செப்டம்பர் 26, செப்டம்பர் 27ம் தேதிகளில் (அதாவது வரும் வியாழன் மற்றும் வெள்ளி) வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ளன. பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்தும்,, ஊதிய உயர்வை வலியுறுத்தியும், பென்சனை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ஒரு வாரம் வங்கிகள் மூடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பகிரப்படுகின்றன. அத்துடன் செப்டம்பர் 28ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் அன்றும் வங்கிகள் இயங்காது. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 29ம் தேதியும் இயங்காது, திங்கள்கிழமை செப்டம்பர் 30ம் தேதி வங்கி அரைவருட கணக்கு முடிவு என்பதால் அன்றும் இயங்காது. அதன் பிறகு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்றும் வங்கிகள் இயங்காது என்று கூறியுள்ளனர்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் மற்றும் வங்கி அதிகாரிகளின் தேசிய அமைப்பு என நான்கு அமைப்புகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.