கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் அமித்ஷா காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் மறுசீரமைப்புக்கு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர்.
மக்களவையில் அமித்ஷா பேசியதாவது:-
காஷ்மீர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது . ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே; காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட காங்கிரஸ்  விரும்புகிறதா? ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மாற்ற முடியாது; இது அரசியல் ரீதியான நகர்வு அல்ல. சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் முடிவெடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை என கூறினார்.
மக்களவையில்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது அனைத்து விதிகளையும் மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை. அரசியலமைப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறியுள்ளார். மக்களவையில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது எனவும் ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரம் நிலுவையில் உள்ளபோது மசோதாவை கொண்டு வந்தது ஏன். காஷ்மீர் உள்நாட்டு விவகாரமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்  எனவும் காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்தார்.
அறிவிக்கப்படாத அவசர நிலை தற்போது நிலவுகிறது  என திமுக எம்பி  டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டினார்.
அமித்ஷா பேசும் போது கூறியதாவது:-
பிரிந்துள்ள காஷ்மீரை ஒன்றிணைக்கும் முயற்சி இது . பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீர் அக்சை சின், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவையே. உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என கூறினார்.#mediahorn#kashmir#article370.

சுதந்திர தினத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: கவர்னர் சத்யபால் மாலிக்

காஷ்மீரில் புல்வாமா போன்று மற்றொரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை திட்டம்

காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனாதிபதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

”உங்களுக்கு முதுகெலும்பு இல்லை; அமருங்கள்” அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை விமர்சித்த திமுக எம்பி டி.ஆர். பாலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *