உத்தர பிரதேசம் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

உத்தர பிரதேசம் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

உத்தர பிரதேசம் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்த பெண்  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை சிவம் திரிவேதி மற்றும் சுப திரிவேதி ஆகியோர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக அப்பெண் புகார் அளித்த போது போலீஸார் அந்த புகாரை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அதன் பின்பு அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சிவம் திரிவேதியை வழக்குபதிவு செய்து கைது செய்தனர். சுபம் திரிவேதி தலைமறைவானார். சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தார் சிவம் திரிவேதி. பாதிக்கப்பட்ட பெண் வழக்கில் ஆஜராக அதிகாலை 4 மணியளவில் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது சிவம் திரிவேதியுடன் நண்பர்கள் சேர்ந்து அப்பெண்ணை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தினர்.

இதனையடுத்து அவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அப்பெண் தன்னை வன்கொடுமை செய்த 2 பேர் உட்பட 5 பேர் தனக்கு தீவைத்ததாக போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீ வைத்த ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.