ஸ்ரீஹரிகோட்டா: இன்று அதிகாலை ஏவப்பட இருந்த சந்திரயான் -2 பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திரயான்-2 செயற்கை கோளை இன்று அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ஏவப்பட இருந்தது.இதற்கான கவுன்டவுன் நேற்று காலை முதல் துவங்கியது.

தொழில் நுட்ப கோளாறு:

இந்நிலையில் சற்று நேரத்தில் ஏவப்பட இருந்த சந்திரயான் -2 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைனையடுத்து கவுன்டவுன் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

சிறு பிரச்னையால்தான் சந்திரயான் -2 தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பெரிய பின்னடைவு என்று சொல்ல முடியாது எனு விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி மார்க்-3 யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டரில் தெரிவித்துள்ளது. ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *