சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்தது. ஆனால் இன்று சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.3,281-ஆக உள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.26,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.40.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10 சதவீதமாக இருந்த தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே தங்கத்தின் விலை வரும் நாட்களில் உயரக்கூடும் என்று தங்கநகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா – சீனா இடையிலான, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என அமெரிக்க அதிபர் டிரம்ப் – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடந்த சந்திப்பில் ஒப்பந்தம் ஆனது. இதனால் தங்கம் விலை சரிந்தது.

இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதற்குள் வர்த்தகப்போருக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர்கள் இழந்ததாலும், அமெரிக்க உற்பத்தி புள்ளி சரிந்ததாலும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்று முன்தினம் டிராய் அவுன்ஸ் 1,439 டாலர் வரை அதிகரித்தது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *