ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த என்ன செய்கிறோம் தெரியுமா..? விளக்கும் நிர்மலா சீதாராமன்..!

ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த என்ன செய்கிறோம் தெரியுமா..? விளக்கும் நிர்மலா சீதாராமன்..!

ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த என்ன செய்கிறோம் தெரியுமா..? விளக்கும் நிர்மலா சீதாராமன்..!

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் 100 நாள் சாதனைகளை விளக்கிக் கொண்டு இருக்கிறார். அதில் ஆட்டோமொபைல் துறை குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆட்டோமொபைல் துறை பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ச்சியாக வேலை இல்லா நாட்கள் அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையைச் சரி செய்ய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது என்கிற கேள்விக்கு பதில் கொடுத்து இருக்கிறார்.
பேச்சு வார்த்தை
இந்திய ஆட்டோமொபைல் துறையில் வியாபாரம் பார்க்கும் பல தரப்பினரையும் ஒன்றாக அலைத்துப் பேசிக் கொண்டு இருக்கிறோம். இப்போது இந்திய ஆட்டோமொபைல் துறை கண்டு வரும் பல சிக்கல்களுக்கு பல வித காரணங்கள் இருக்கின்றது என ஆட்டோமொபைல் துறை சார்ந்தவர்களே வாய் திறந்து சொல்லி இருக்கிறார்கள். அந்த நிலையை சரி செய்வதற்குத் தான் அவர்களிடம் பேசி வருகிறோம்.