அலற வைக்கும் ஆயிரம் ஜென்மங்கள்!

அலற வைக்கும் ஆயிரம் ஜென்மங்கள்!

அலற வைக்கும் ஆயிரம் ஜென்மங்கள்!

காலம்காலமாக காமெடி, காதல் படங்கள் எடுத்து வந்த இயக்குனர் எழில் முதன்முறையாக பேய் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த ’எக்கடிக்கி போதாவு சின்னவாடா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படம் உருவாகியுள்ளது. டார்லிங் என்ற பேய் படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பல காமெடி, காதல் படங்களை நடித்து வந்தார். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷின் சில படங்கள் சரியாக போகாத நிலையில் மீண்டும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மூலம் ஹிட் கொடுக்க உத்தேசித்திருப்பதாக தெரிகிறது.

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிகிஷா படேல், ஈஷா ரெப்பா முதலியோர் நடித்துள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், சதீஷ் உள்ளிட்ட காமெடி பிரபலங்கள் நடித்திருந்தாலும் படத்தின் ட்ரெய்லர் முழுவதும் சீரியஸான கதை போலவே காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே 100% காதல் என்ற தெலுங்கு ரீமேக்கில் நடித்து அது சரியான அளவில் வசூலிக்காத நிலையில் ஜி.வி.பிரகாஷுக்கு இந்த தெலுங்கு பேய்பட ரீமேக் கை கொடுக்குமா என்பது படம் வெளியாகும்போது தெரிய வரும்.