47 வயதில் 4 தங்கப் பதக்கம்

47 வயதில் 4 தங்கப் பதக்கம்

வயதானால் என்ன... குழந்தைகளை பெற்றுக் கொண்டால் என்ன... லட்சியத்துடன் செயல்பட்டால் 47 வயதிலும் சாதனை படைக்கலாம் என ஆசிய பளு தூக்கும் போட்டியில் நிரூபித்திருக்கும் பாவனா தீவிர பயிற்சி எடுத்துக் கொண்டார்.
 "ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் செய்து கொண்ட மருத்துவ சிகிச்சையின் விளைவாக சில பக்க விளைவுகள் ஏற்பட்டன. அவற்றை சரி செய்ய உடல் பயிற்சி செய்யச் சொன்னார்கள். அதனால் உடற் பயிற்சி செய்ய நான் ஜிம்மில் சேர்ந்தேன். அங்கே பயிற்சி செய்யும் விமானப் படை வீரர்கள் எனக்கு பளு தூக்கும் பிரிவை அறிமுகம் செய்து வைத்தார்கள். பொதுவாக பெண்களுக்கு நாற்பது வயதானதும் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக உடல் சக்தி குறையும். எலும்பு தேய்மானம் தலை நீட்டும். அதனால் உடற் பயிற்சி செய்வதில் எச்சரிக்கை வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு. இவை அனைத்தும் பாவனாவுக்குத் தெரியும் என்றாலும் அவர் சாதனை புரிய தேர்ந்தெடுத்தது பளு தூக்கும் போட்டி. உடல் உறுதி முக்கியத் தேவையாக இருக்கும் பளு தூக்கும் பிரிவை பாவனா ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அணுகினார்.
 பாவனா தோகேகர் புனே நகரத்தில் வசிப்பவர். கணவர் ஸ்ரீபத் தோகேகர் இந்திய விமானப்படையில் பணிபுரிகிறார். சமீபத்தில் ரஷ்யாவில் நடந்து முடிந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் (பவர் லிஃப்டிங்) 4 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
 எனக்கு அந்த பயிற்சி பிடித்துப் போனது. தொடர்ந்து பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். பிறகு பளு தூக்குவதில் அதிக ஈடுபாடு ஏற்பட்டு சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற உந்துதலும் என்னுள் எழுந்தது. பளு தூக்கும் போட்டிகளில் பங்குபெற இந்த விளையாட்டில் இருக்கும் யுக்திகளைத் தெரிந்து கொள்ள யூடியூப்பில் காணொளிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். பளு தூக்குவதில் உள்ள சூட்சுமங்கள் புரிய ஆரம்பித்ததும், உலக பளுதூக்கும் சம்மேளனம் குறித்தும் தெரிந்து கொண்டேன்.
 போட்டிகளில் பங்கேற்க முதல் படியாக, ஆந்திரா - கர்நாடக பளுதூக்கும் சங்கத் தலைவர் முகமது அஸ்மத்தை தொடர்பு கொண்டு, ""நானும் போட்டிகளில் கலந்து கொள்ளலாமா'' என்று கேட்டேன். அவர் தந்த அறிவுரையின் படி பெங்களூருவில் உள்ள பளு தூக்கும் சம்மேளனம் நடத்திய தகுதித் தேர்வில் பங்கு பெற்று மாஸ்டர் 2 பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து மேல்கட்ட பயிற்சிகள் முறையாக எனக்குத் தரப்பட்டன. எனது ஆர்வத்தையும் திறமையையும் பார்த்து ரஷ்யாவில் நடைபெற்ற ஆசிய ஓபன் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைத் தந்தார்கள்.
 இந்தப் போட்டியில் 46 நாடுகளிலிருந்து 500 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இந்தியாவில் இருந்து மட்டும் 14 பேர் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளில் நான்கு பிரிவுகளில் நான்கு தங்கப் பதக்கங்களை என்னால் பெற முடிந்தது. இந்த சாதனைக்கு கணவர் பிள்ளைகளின் ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் அடிப்படைக் காரணம். அதனால் எனக்கு தொடர்ந்து பயிற்சி செய்ய நேரமும் வாய்ப்பும் கிடைக்கிறது. நான் தொலை தூர ஓட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறேன். "பளு' தூக்கும் போட்டியில் எனது சாதனையைப் பார்த்து அமிதாப்பச்சன் பாராட்டியுள்ளார். அது எனக்கு ஐந்தாவது பதக்கம் மாதிரி'' என்கிறார் பாவனா.