ஷாக்.. ஒருத்தர் துணை முதல்வர்.. இன்னொருத்தர் கிளாஸ் வாத்தியார்..

ஷாக்.. ஒருத்தர் துணை முதல்வர்.. இன்னொருத்தர் கிளாஸ் வாத்தியார்..

ஷாக்.. ஒருத்தர் துணை முதல்வர்.. இன்னொருத்தர் கிளாஸ் வாத்தியார்..

2 பேரும் சேர்ந்து 4ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து நாசம் செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. தன்பாத்தில் ஒரு பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.  இதனால் அவளது பெற்றோர் பதறி அடித்து கொண்டு குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அவளை பரிசோதித்த டாக்டர்கள், பாலியல் கொடுமைக்கு குழந்தை ஆளாகி இருப்பதாக சொன்னார்கள். இதை கேட்டு அதிர்ந்த பெற்றோர், குழந்தையிடமே இதை பற்றி விசாரித்தனர். அப்போது, ஒரு மாசத்துக்கு முன்பு பள்ளியில் தன்னை ஆசிரியர்கள் பலாத்காரம் செய்ததை சொல்லி அழுதுள்ளாள். சம்பவத்தன்று,திடீரென கிளாஸ் ரூமில் மயங்கி விழுந்து விட்டாள் சிறுமி. உடனே, வகுப்பு ஆசிரியர், ஓய்வு அறைக்கு செல்லுமாறு சொல்லி உள்ளார். உடம்பெல்லாம் ரத்தம்..

கட்டிங் வேணும்.. ஃபுல் போதையில் அட்டகாசம் செய்த இளைஞர்.. மிரட்டல் வீடியோ! அதன்படியே சிறுமியும், சென்றபோது, பின்னாடியே வந்த ஆசிரியர் ஒரு மாத்திரையை சிறுமிக்கு தந்திருக்கிறார். அதை வாங்கி சாப்பிட்டதும், குழந்தை மயங்கி அங்கேயே விழுந்து விட்டாள். அப்போது, பள்ளியின் துணை தலைமை ஆசிரியரும், கிளாஸ் டீச்சரும் சேர்ந்து, அதே ரூமில் வைத்து சீரழித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கட்ராஸ் போலீசார், சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் துணை முதல்வர் மற்றும் பள்ளியின் செவிலியர் உட்பட 2 ஆசிரியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் சிறுமியின் மருத்துவ ரிப்போர்ட் வந்ததும், விசாரணை இன்னம் தீவிரமாகும் என்று தெரிகிறது. 4-ம் வகுப்பு படிக்கும் குழந்தையை இப்படி பள்ளி ஆசிரியர்களை பாழ்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.