விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அஸாம்!

விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அஸாம்!
விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அஸாம்!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். 

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் கராச்சியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் எடுத்தது. 

அந்த அணியின் 3-வது வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கும் பாபர் அஸாம் அதிகபட்சமாக சதம் அடித்து 115 ரன்கள் குவித்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அஸாமின் 11-வது சதமாகும். இந்த 11-வது சதத்தை பாபர் அஸாம் 71-வது இன்னிங்ஸில் எட்டியுள்ளார். இதன்மூலம், குறைந்த இன்னிங்ஸில் 11 சதத்தை அடித்த வீரர்கள் வரிசையில் கோலியை பின்னுக்குத் தள்ளி 3-வது பாபர் அஸாம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது. விராட் கோலி தனது 11-வது சதத்தை 82-வது இன்னிங்ஸில் அடித்துள்ளார்.