வாயை கொடுத்து வசமாக மாட்டி கொண்ட நித்தியானந்தா

வாயை கொடுத்து வசமாக மாட்டி கொண்ட நித்தியானந்தா

வாயை கொடுத்து வசமாக மாட்டி கொண்ட நித்தியானந்தா

திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரது பேச்சுக்கள் அடிக்கடி யூடியூப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேச்சுமே வைரல்தான்.. சில சமயம் இதை கேட்கும்போது நமக்கு தலையே சுற்றிவிடும்.

தன்னுடைய கட்டளையை கேட்டுதான் சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது என்று சொல்லும்போதே பலர் உஷாராகாமல் போய்விட்டனர். இதற்கு பிறகுதான் ஜலகண்டேஷ்வரர் கோயில் லிங்கம் தொடர்பான வீடியோவை வெளியிட்டார்.

அதில், மேட்டூர் அணையின் நீருக்குள் உள்ள பழமையான சிவன் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமில்லை.. அந்த கோவிலை போன ஜென்மத்தின் போது தானே கட்டியதாகவும் தெரிவித்தார்.

இப்படி சொல்லியதுமே 2 பேர் கிளம்பி ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க போய்விட்டனர். பாலவாடி வேலுசாமி, சக்திவேல் ஆகியோர், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான லிங்கத்தை நித்யானந்தா திருடி சென்றதாக கொளத்தூர் போலீசில் புகார் தந்துள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த கோவிலானது மேட்டூர் அணை கட்டும்போது இடமாற்றம் செய்யப்பட்டு பாலவாடி கிராமத்தில் புனரமைக்கப்பட்டது. உண்மையிலேயே லிங்கம் நித்யானந்தாவிடம்தான் உள்ளதா? அல்லது வெறும் பரபரப்புக்காக நித்யானந்தா இப்படி வீடியோவில் பேசினாரா என்பது இனிமேல்தான் போலீசார் விசாரணையில் தெரியவரும்.

அதனால், கர்நாடக மாநிலம் பிடதிக்கு சென்று நித்தியானந்தாவை அழைத்து வந்து மூல லிங்கம் எங்கே இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருக்கிறார்களாம்!