விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி: 'தளபதி 64' படக்குழு அறிவிப்பு

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி: 'தளபதி 64' படக்குழு அறிவிப்பு

விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை 'தளபதி 64' படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இறுதியில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவிக்கப் படக்குழு ஒப்பந்தம் செய்தது.

இதுகுறித்த தகவல்கள் வெளியானாலும், படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காமலிருந்தது. இன்று (செப்டம்பர் 30) முதல் அடுத்த 3 நாட்களுக்கு 'தளபதி 64' குறித்த அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்தது.

அதன்படி, விஜய்யுடன் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நாயகி மற்றும் இதர நடிகர்கள் உள்ளிட்ட விவரங்களை நாளை (அக்டோபர் 1) அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது. நாயகியாக கியாரா அத்வானி மற்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது 'தளபதி 64' படக்குழு.

அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.