முதல் டெஸ்டில் விளையாடவுள்ள 11 வீரர்களின் பெயர்களை இன்றே அறிவித்த பிசிசிஐ!

முதல் டெஸ்டில் விளையாடவுள்ள 11 வீரர்களின் பெயர்களை இன்றே அறிவித்த பிசிசிஐ!

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் ரித்திமான் சாஹா விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என அறிவித்துள்ளார் விராட் கோலி. சாஹா, கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 2018-ல் விளையாடினார். காயம் காரணமாக அவர் இதர தொடர்களிலிருந்து விலகினார். இதற்குப் பிறகு விக்கெட் கீப்பராகச் செயல்பட்ட ரிஷப் பந்த், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் சதங்கள் எடுத்தார். எனினும் இந்திய ஆடுகளங்களில் சாஹா பொருத்தமான விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடவுள்ள 11 வீரர்களின் பெயர்களை இன்றே அறிவித்துள்ளது பிசிசிஐ. அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, அஸ்வின், ஜடேஜா, சாஹா, இஷாந்த் சர்மா, ஷமி.