தலைமை நீதிபதியை மாற்ற எதிர்ப்பு.. தமிழகம், புதுவையில் வக்கீல்கள் போராட்டம்

தலைமை நீதிபதியை மாற்ற எதிர்ப்பு.. தமிழகம், புதுவையில் வக்கீல்கள் போராட்டம்

தலைமை நீதிபதியை மாற்ற எதிர்ப்பு.. தமிழகம், புதுவையில் வக்கீல்கள் போராட்டம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தமிழகம் முழுதும் இன்று 1 லட்சம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளோம்.

தலைமை நீதிபதி மாற்றத்தை திரும்ப பெற கோரி, அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும் ஒருங்கிணைந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடமும், குடியரசுத் தலைவரிடமும் மனு அளிக்க உள்ளோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தனது இடமாற்றத்தை விரும்பாத தலைமை நீதிபதி தனது ராஜினாமாவை அனுப்பி வைத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.