தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

கர்நாடகாவில் முதல்வராக இருந்த குமாரசாமி அரசு மீது அதிருப்தி தெரிவித்து ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகளின் 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து 17 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார்.

மேலும் 2023-ம் ஆண்டு வரை தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் தேர்தலில் போட்டியிட முடியாது என சபாநாயகர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது

இதன் மீது இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சபாநாயகர் மற்றும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சித்தராமையா ஆகியோர் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை வரும் 25-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.