டென்ஷன்கார நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா

டென்ஷன்கார நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா

டென்ஷன்கார நிர்மலா சீதாராமனிடமிருந்து வெளிவந்த பாசக்கார அம்மா

நாடு முழுவதும் தேசிய மகள்கள் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சோஷியல் மீடியாவில், பலரும் தங்களது மகள்களின் போட்டோக்களை பதிவிட்டு,வாழ்த்து சொல்லி தங்கள் அவாவை வெளிப்படுத்தினர்.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, தன் மகள், மிரயா வாத்ரா, பனியில் நனைவது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டார். அது மட்டுமல்ல, "ஒவ்வொரு நாளும் மகள்களின் தினமே' என்றும் அதற்கு கீழே பதிவிட்டிருந்தார்.

பாஜகவி மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான, நிர்மலா சீதாராமன், தன் மகளின் போட்டோவை பதிவிட்டிருந்தார். அது பழைய போட்டோதான். இளமை தோற்றத்துடன் காணப்படுகிறார் நிர்மலா. பாப்-கட்டிங் செய்த தன் மகளை இடுப்பில் தூக்கி வைத்து கொண்டிருக்கிறார்.

அதற்கு கீழே, "என் மகளை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. அவள் என் தோழி, என் வழிகாட்டி"என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது