சாய் பல்லவியை மணக்க விரும்பும் ஹீரோ

சாய் பல்லவியை மணக்க விரும்பும் ஹீரோ

சாய் பல்லவியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியுள்ளார், தெலுங்கு ஹீரோ வருண் தேஜ். சமீபத்தில் வெளியான கட்டலகொண்டா கணேஷ் படத்தில் நடித்துள்ளார், வருண் தேஜ். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் வருண் தேஜுடன் கலந்துரையாடினார் லட்சுமி மன்ச்சு. அப்போது அவர், “சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, ராசி கன்னா ஆகியோரில், யாரை திருமணம் செய்துகொள்ள விருப்பம்? யாருடன் டேட்டிங் செல்ல ஆசை? யாரை ஒழிக்க திட்டம்?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த வருண் தேஜ், ராசி கன்னாவை ஒழிக்க திட்டம் என்று காமெடியாக சொன்னார். பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங் செய்ய விரும்புவதாகவும், திருமணம் என்றால் சாய் பல்லவிதான் தனது சாய்ஸ் என்றும் சொன்னார். நல்ல மனதுக்காக சாய் பல்லவியை திருமணம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.