சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படமாக உருவாகும் ட்ரிப்

சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படமாக உருவாகும் ட்ரிப்

இயக்குனர் சாம் ஆண்டனி உதவியாளர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் படம், ட்ரிப்.  ஒளிப்பதிவு, உதயசங்கர். இசை, சித்து குமார். அதர்வாவின் 100 படத்தில்  நடித்த பிரவீன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக சுனேனா நடிக்கிறார். மற்றும் யோகி பாபு, கருணாகரன் நடிக்கின்றனர்.

இதில் நடிப்பது குறித்து சுனேனா கூறுகையில், ‘யோகி பாபுவும், கருணாகரனும் பெயின்ட் அடிக்கும் வேலைக்காக பயணம் மேற்கொள்கின்றனர். அப்போது இடையே குறுக்கிடும் 5 ஆண்களும், 4 பெண்களும் கொண்ட டூரிஸ்ட் கும்பல், அவர்களுடன் சேர்ந்து காட்டுக்குள் சந்திக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் சயின்ஸ்பிக்‌ஷன் டார்க்  காமெடி படம் இது’ என்றார்.